வெறும் டவலுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா... ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி மக்களை ரசிகர்களாக பெற்ற லாஸ்லியா இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக பிக் பாஸ் தர்ஷன் நடித்துவருகிறார்.

இதுதவிர பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள லாஸ்லியா இப்பொழுது வெறும் டவலுடன் நின்று கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக

செய்தி வாசிப்பாளராக

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமே இல்லாத பலர் திரை வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க அந்த வரிசையில் அனைவரும் விரும்பும் மிகச்சிறந்த நபராக லாஸ்லியா உள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல சர்ச்சைகளுக்கு இடையிலும் பெயரும் புகழும் கிடைக்க இப்பொழுது படங்களிலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் முதலில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்த முடித்துள்ள லாஸ்லியா அதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜூன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கூகுள் குட்டப்பன்

கூகுள் குட்டப்பன்

உயிரற்ற ரோபோவுக்கும் வயதான முதியவருக்கும் இடையே இருக்கும் அளவற்ற அன்பை உணர்ச்சிபூர்வமாக காட்சிப்படுத்தி இருந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற மலையாளத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் இந்த படத்திற்கு கூகுள் குட்டப்பன் என தலைப்பிடப்பட்டிருக்க லாஸ்லியா கதாநாயகியாகவும் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் இருவர் இணைந்து இயக்கி வருகின்றனர்.

வித்தியாசமான காம்பினேஷனில்

வித்தியாசமான காம்பினேஷனில்

லாஸ்லியாவின் அழகுக்கு மயங்காத இளசுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொள்ளை அழகில் இருக்கும் இவரின் பல புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இப்பொழுது பிங்க் பிளேசர் உடன் கீழே வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு வித்தியாசமான காம்பினேஷனில் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தாறுமாறாக இணையத்தை கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X