"பச்சைக்கிளி" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் !

சென்னை : சென்ற ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட லாஸ்லியா இப்பொழுது தமிழில் பிரெண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

செய்தி வாசிப்பாளரான இவர் இப்பொழுது பல கோடி ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது கண்ணைக் கவரும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா, இப்பொழுது குளத்தின் அருகே பச்சை நிற உடையில் அம்சமான போட்டோ ஷுட்டில் ஆரவார படுத்தியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு லைக்குகளை அள்ளி வருகின்றன.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா சமீபகாலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பாடல்கள் என அனைவரையும் ரசிக்க வைத்து "மான்குட்டி" போல துள்ளித்திரிந்த லாஸ்லியா அனைவரையும் கவர்ந்த நிலையில் உலகத் தமிழர்கள் பல கோடி இதயங்களை பெற்றார்.

தமிழில் அறிமுகமாகும்

தமிழில் அறிமுகமாகும் "பிரண்ட்ஷிப்"

மிகவும் திறமை வாய்ந்த நடிகையான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஹர்பஜன்சிங் தமிழில் அறிமுகமாகும் "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இதில் ஆக்சன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமே அதிரடியாக

ஆரம்பமே அதிரடியாக

இவ்வாறு ஆரம்பமே அதிரடியாக இருக்க பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் வேலைகள் முற்றிலும் நடைபெற்று விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரண்டு முன்னணி திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறி தமிழ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கண்ணைக் கவரும்

கண்ணைக் கவரும்

தமிழ் சினிமாவில் மிக விரைவிலேயே மிகப்பெரிய உயரத்தை எட்ட உள்ள லாஸ்லியா தனது ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது கண்ணைக் கவரும் போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வைரலாகி வந்தார்.

அன்பை அள்ளி

அன்பை அள்ளி

அதைத்தொடர்ந்து சில போட்டோஷூட்டில் யாரும் எதிர்பாராதவாறு கவர்ச்சியும் காட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், எனினும் இவருக்கான ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல இப்பொழுது மீண்டும் மற்றுமொரு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வருகிறார்.

பச்சைக்கிளி

பச்சைக்கிளி

பச்சை நிற உடையில் குளத்தின் அருகில் நின்று கொண்டு அம்சமான போஸ்களில் ஆரவாரப்படுத்தியிருக்கும் லாஸ்லியாவை பார்த்த அவரது ரசிகர்கள் " பச்சைக்கிளி" என செல்லமாக அழைத்து வந்ததையடுத்து இந்த புகைப்படங்களை இப்போது வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X