twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஷ்டங்களை மறந்து சிரிக்கும் சாதாரண பொண்ணு நான்.. பட்டுப்புடவையில் லாஸ்லியா.. அம்சம்!

    |

    சென்னை : நடிகை லாஸ்ஸியா இப்பொழுது தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார்.

    கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

    எனக்கு நல்லா கம்பெனி கொடுக்குற ஒரே ஆள் நீதான்.... பீச்சில் கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ்!எனக்கு நல்லா கம்பெனி கொடுக்குற ஒரே ஆள் நீதான்.... பீச்சில் கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ்!

    இப்போதிலிருந்தே கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் லாஸ்லியா தான் பல கஷ்டங்களை மறச்சிகிட்டு சிரிக்கிற ஒரு சாதாரண பொண்ணு என பட்டுப் புடவையில் இருக்கும் அம்சமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

    கூகுள் குட்டப்பன்

    கூகுள் குட்டப்பன்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக விளையாடி தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை லாஸ்லியா இப்பொழுது தமிழில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய சக பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் ரீமே

    தமிழ் ரீமே

    கே. எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வரும் கூகுள் குட்டப்பன் திரைப்படம் மலையாளத்தில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் அந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் தயாரித்து வருவதோடு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் பலர் இதில் நடித்து வருகின்றனர்.

    கதாநாயகியாக அறிமுகம்

    கதாநாயகியாக அறிமுகம்

    ஹர்பஜன் சிங்,ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாக உள்ள லாஸ்லியா இதில் நட்புக்கு முக்கியத்துவம் தரும் வேடத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

    கஷ்டங்களை மறச்சிகிட்டு சிரிக்கிற

    கஷ்டங்களை மறச்சிகிட்டு சிரிக்கிற

    இவ்வாறு படங்களில் படு பிஸியாக நடித்து வந்தாலும் காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வரும் லாஸ்லியா, பல கஷ்டங்களை மறச்சிகிட்டு சிரிக்கிற ஒரு சாதாரண பொண்ணு நான் என அம்சமான பட்டுப்புடவையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

    English summary
    Actress Losliya is looking stunning and released pics in Silk saree.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X