அப்பாவின் மரணத்திற்குப் பிறகு லாஸ்லியாவின் முதல் போட்டோஷூட்!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன் இப்பொழுது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை சென்ற லாஸ்லியா பிரண்ட்ஷிப் திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக புதுபுது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த லாஸ்லியா தந்தை மறைவிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு அப்புறம் பதிவிட்டுள்ள பிளாக் அண்ட் வொயிட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பல வாய்ப்புகளை

பல வாய்ப்புகளை

இலங்கையில் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லொஸ்லியா மரியநேசன் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு பல வாய்ப்புகளை மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதையும் வென்றார்.

 பசங்களோட ஃபேவரைட் க்ரஷ்

பசங்களோட ஃபேவரைட் க்ரஷ்

நடிப்பு நடனம் பேச்சு என அனைத்திலும் சிறந்து விளங்கும் லாஸ்லியா, பிக் பாஸ் வீட்டில் சிறந்த விளையாட்டின் மூலமும் சின்னச்சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலமும் அனைவரையும் கவர்ந்ததோடு தமிழ்நாட்டு பசங்களோட ஃபேவரைட் க்ரஷ் ஆகவும் இருந்து வருகிறார். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததைத் தொடர்ந்து இப்பொழுது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

திரில்லர் திரைப்படத்தில்

திரில்லர் திரைப்படத்தில்

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் ஃபிரண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ள லாஸ்லியா அதைத்தொடர்ந்து ராட்சசன்,ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் புதிய திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

வெளிச்சத்தில் நின்றவாறு

வெளிச்சத்தில் நின்றவாறு

மிக விரைவில் தமிழ் சினிமாவை கலக்க இருக்கும் லாஸ்லியா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து கொடுத்து வந்த நிலையில் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களின் பக்கம் வராமல் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிச்சத்தில் நின்றவாறு முகத்தில் கொஞ்சூண்டு சிரிப்புடன் அம்சமாய் போஸ் கொடுத்துக்கொண்டு "ஃபெய்த்" தலைப்பிட்டு வெளியிட்டுள்ள பிளாக் அண்ட் வொயிட் போட்டோ ரசிகர்களின் அரவணைப்பில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் மீண்டும் உங்களை சமூகவலைதளத்தில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி என நம்பிக்கையளிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X