பொங்கல் அதுவுமாக இப்படியா? லாஸ்லியாவை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்!

சென்னை : செய்தி வாசிப்பாளரான நடிகை லாஸ்லியா இப்பொழுது பல கோடி ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது கண்ணைக் கவரும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா, இப்பொழுது பாவாடை சட்டையில் கையில் கரும்புடன் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஆரஞ்சு நிற உடையில் அம்சமான போட்டோ ஷூட்டில் ஆரவார படுத்தியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு லைக்குகளை அள்ளி வருகின்றன.

லாஸ்லியா

லாஸ்லியா

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா சமீபகாலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பாடல்கள் என அனைவரையும் ரசிக்க வைத்து "மான்குட்டி" போல துள்ளித்திரிந்த லாஸ்லியா அனைவரையும் கவர்ந்த நிலையில் உலகத் தமிழர்கள் பல கோடி இதயங்களை பெற்றார்.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

மிகவும் திறமை வாய்ந்த நடிகையான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹர்பஜன்சிங் தமிழில் அறிமுகமாகும் "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இதையடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் படவாய்ப்பு இல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

பொங்கல் அதுவுமாக இப்படியா?

பொங்கல் அதுவுமாக இப்படியா?

தமிழ் சினிமாவில் மிக விரைவிலேயே மிகப்பெரிய உயரத்தை எட்ட நினைத்த லாஸ்லியாவுக்கு இரண்டு படங்களும் தோல்வித்திரைப்படமான அமைந்ததால், படவாய்பை பெற அவ்வப்போது கண்ணைக் கவரும் போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். லாஸ்லியா பொங்கலுக்கு ஆரஞ்ச் நிற பாவாடை சட்டையில் கையில் கரும்பு வைத்துக்கொண்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இது பாவாடை சட்டையா இல்லை... பாவாடை ஜாக்கெட்டா என கேட்டு லாஸ்லியாவை வம்புக்கு இழுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X