கையை அங்க வச்சு..அசத்தலாக அன்பைச் சொன்ன லாஸ்லியா..என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா!

சென்னை : நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற இவர் அழகில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை அளித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, முகின் ராவ், தர்ஷன் என ஆண் நண்பர்களுடன் இயல்பாக பழகினார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

அதுமட்டுமில்லாமல், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த லாஸ்லியா அப்பா அவரை,கண்டபடி திட்டிதீர்த்தார். இதையடுத்து, கவின் அந்த நிகழ்ச்சியிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேறினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொள்ளவே இல்லை.

ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த தர்ஷனுடன் இணைந்து நடித்தார் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

க்யூட் போட்டோஸ்

க்யூட் போட்டோஸ்

லாஸ்லியா மற்ற நடிகைகளைப் போல சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஆனால், எதிர்பார்ப்பது போல பல வாய்ப்பு வரவில்லை. தற்போது லால்ஸ்லியா, தனது ரசிகர்களிடம் தனது அன்பை சொல்லும்விதமாக இதய வடிவத்தில் கையை வைத்து தனது அன்பை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவுக்கு மலைபோல் லைக்குகள் குவித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X