லாஸ்லியாவை சுற்றி அலைமோதிய ரசிகர்கள்.. தியேட்டரில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி விட்டார்.

பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் கோலிவுட்டில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான பிரண்ட்ஷிப் படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடிய லாஸ்லியாவை ஏகப்பட்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபிக்களை எடுத்தனர்.

ஹீரோயின் லாஸ்லியா

ஹீரோயின் லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியாவுக்கு அந்த நிகழ்ச்சி முடிந்த உடனே ஏகப்பட்ட படங்கள் வரிசைக் கட்டி புக் ஆகின. ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் என பெரிய பட்டாளத்துடன் லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ரசிகர்களுடன் லாஸ்லியா

ரசிகர்களுடன் லாஸ்லியா

திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் மற்றும் ஹர்பஜன் சிங்கின் பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் ரிலீசாகி உள்ளன. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடிகை லாஸ்லியா ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து கொண்டாடினார்.

குஷியில் ரசிகர்கள்

குஷியில் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள லாஸ்லியாவை திரையரங்கில் ரசிகர்கள் பார்த்ததும் குஷியாகி விட்டனர். நடிகை லாஸ்லியாவை சூழ்ந்து கொண்டு அவருடன் இணைந்து செல்ஃபிக்களையும் புகைப்படங்களையும் பலர் எடுத்துக் கொண்டனர். சிலர் ஆட்டோகிராஃப்களையும் வாங்கி சென்றனர்.

லாஸ்லியா ஹாப்பி

லாஸ்லியா ஹாப்பி

மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வரும் லாஸ்லியாவின் முதல் படம் ரிலீசான சந்தோஷத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்த லாஸ்லியா ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து ரொம்பவும் ஹாப்பி ஆகி விட்டார். மீடியாக்களிடமும் ரசிகர்களுடனும் ரொம்பவே கேஷுவலாக பேசிய லாஸ்லியாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஹர்பஜன் சிங் அறிமுகம்

ஹர்பஜன் சிங் அறிமுகம்

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் ஒரே ஒரு சீனுக்கு வந்து செல்லும் ஹர்பஜன் சிங் முழுக்க முழுக்க ஹீரோவாக நடித்துள்ள படம் தான் பிரண்ட்ஷிப். பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வலுவான கதையுடன் அமைந்துள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X