»   »  என் அப்பாவால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்: சூப்பர்ஸ்டார் மகள் வருத்தம்

என் அப்பாவால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்: சூப்பர்ஸ்டார் மகள் வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது தந்தை அனில் கபூரால் தான் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். அவர் நடிப்பில் வெளியான நீரஜா படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் தனது தந்தையால் தான் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சல்மான் கான்

சல்மான் கான்

என் தந்தையால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கான் என்னுடன் நடிக்க விரும்பவில்லை. அனில் கபூர் என் நெருங்கிய நண்பர். அவர் மகளுடன் நான் ரொமான்ஸ் செய்வதா என்றார்.

ஃபரா கான்

ஃபரா கான்

இயக்குனரும், நடன இயக்குனருமான ஃபரா கான் என் தாயின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆனால் நான் இது வரை அவர் படத்ததில் நடித்தது இல்லை. அவர் என்னை ஒரு நடிகையாகவும் பார்க்கவில்லை.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களாக உள்ள பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இந்த துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. ஆலியா பட் இன்று வெற்றி நாயகியாக உள்ளார் என்றால் அதற்கு அவரது திறமை அல்லாமல் குடும்பம் காரணம் என்கிறீர்களா?

அனில் கபூர்

அனில் கபூர்

என் தந்தையிடம் இருந்து எந்த உதவியையும் பெற மறுத்துவிட்டேன். நான் திரையுலகில் இருந்தும் நீ ஏன் என்னிடம் உதவி பெற மாட்டேன் என அடம் பிடிக்கிறாய் என்று என் தந்தை கேட்டதுண்டு.

English summary
Bollywood actress Sonam Kapoor said that she lost many films because of her actor father Anil Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil