இப்படி எனக்கு நானே ஆப்பு வைச்சுப்பேனா: புலம்பும் ஹன்சிகா
சென்னை: சிம்புவுடனான காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால் ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாம்.
ஹன்சிகாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் என்று பலநாட்களாக பேசப்பட்டது. முதலில் இதை மறுத்து வந்த ஹன்சிகா இறுதியில் ஆமாம் நான் சிம்புவை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ஹன்சிகாவுக்கு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

துரத்திய தயாரிப்பாளர்கள்
கோலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக இருக்கும் ஹன்சிகாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அவரை தயாரிப்பாளர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். ஹன்சிகாவும் சந்தோஷமாக கால்ஷீட் கொடுத்து வந்தார்.

நழுவும் வாய்ப்பு
தனது காதலை அறிவித்த பிறகு சில தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லையாம். இதனால் அவர்கள் வேறு நடிகைகளை தேடிப் போகிறார்களாம்.

5 வருஷம் இருப்பேன்
வாய்ப்புகள் குறைவதைப் பார்த்த ஹன்சிகா நான் இன்னும் 5 ஆண்டுகள் சினிமாவில் தாங்க இருப்பேன் என்று மைக் வைக்காத குறையாகக் கூறியும் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களாம்.

நயன், காஜல்
ஹன்சிகாவுக்கு பதில் நயன்தாரா, காஜல் அகர்வாலை தேடிச் செல்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

நஸ்ரியா
நயன், காஜல் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நஸ்ரியாவிடம் செல்கிறார்களாம். இப்படித் தான் ஹன்சிகாவுக்கு கிடைக்க வேண்டிய 2 படங்கள் நஸ்ரியாவுக்கு சென்றுவிட்டதாம்.

அவசரப்பட்டு விட்டேனோ
வாய்ப்புகள் பிற நடிகைகளுக்கு செல்வதைப் பார்த்து ஹன்சிகா கவலையில் உள்ளாராம். அவசரப்பட்டு காதலை அறிவித்து நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொண்டோமோ என்று புலம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











