பள்ளியில் ஒருவன், கல்லூரியில் ஒருவனை காதலித்தேன்: அமலா பால்
ஹைதராபாத்: தான் இதுவரை 2 பேரை காதலித்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார்.
அமலா பால் ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அனகா என்ற பெயரில் தான் சினிமாவில் அறிமுகமானதாகவும், அந்த பெயரை வைத்து கூப்பிட கஷ்டமாக இருந்ததால் அமலா பால் என்று பெயரை மாற்றியதாகவும் தெரிவித்தார்.
அமலா பால் என்ற பெயர் தான் அவருக்கு ராசியானதாம்.

பள்ளியில் ஈர்ப்பு
அமலா பள்ளியில் படித்தபோது அவருக்கு ஒரு பையனை பிடித்துள்ளது. அந்த பையனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆனால் அது காதலா என்று அவருக்கு தெரியவில்லையாம். சில நாட்களில் அந்த பையன் மீதான ஈர்ப்பும் போய்விட்டதாம்.

கல்லூரியில் காதல்
அமலா பால் கல்லூரிக்கு சென்ற போது வேறு பையனை காதலித்துள்ளார். ஆனால் அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று அவருக்கு தெரியவில்லையாம். தற்போது அந்த காதலும் இல்லையாம்.

கணவர்
அமலாவுக்கு கணவராக வருபவர் அனைவருக்கு உதவும் குணம் கொண்டவராக இருக்க வேண்டுமாம். பிறர் கஷ்டங்களை புரிந்துகொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் அமலா.

படித்த குடும்பம்
அமலா பால் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவராம். மாடலிங் செய்யும்போது மலையாள இயக்குனர் ஒருவரின் கண்ணில்பட்டு நடிகையாகிவிட்டாராம். அவர் நடித்த மலையாளப் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார் அமலா. ஆனால் அங்கு அவரையும் சேர்த்து 5 பேர் தான் படத்தை பார்த்துள்ளனர். அப்போது தான் படத்தின் கதைக்கான முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டாராம். அதன் பிறகு அவர் நடித்த மைனா அவருக்கு திருப்புமுனையாக இருந்தது.

போஸ்டரைப் பார்த்து வருந்தினேன்
தமிழில் சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த அமலா பாலை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டினார்களாம். அந்த போஸ்டர்களைப் பார்த்து அவர் வருத்தப்பட்டதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











