சமத்தா இருந்த சமந்தா இப்படி ஆயிட்டாரே... கண் கலங்கும் நண்பர்கள்!

சென்னை: மனம் கவர்ந்தவரைப் பிரிந்ததால் நடிகை சமந்தா எப்போதும் சோகத்துடன் காணப்படுவதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிஷாவைத் தொடர்ந்து விரைவில் திருமணச் செய்தி சொல்வார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென சமந்தாவின் காதல் உடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்பவர் எனப் பெயர் பெற்றவர் சமந்தா. 'நான் யாரைக் காதலிக்கிறேன்னு உங்களுக்கே தெரியும். அவர் பேரை நானே சொல்லணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க? ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க. காதல்ல இருக்கேன்னு மட்டும் எழுதிக்கோங்க' என தன் காதலைக் கூட வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர் அவர்.

Love failure makes actress Samantha so sad

இருவரும் இணைந்து படவிழாக்கள், கோவில், குளம் என சுற்றியதில் சமந்தாவின் மனம் திருடிய நபர் யார் என்பது அவர் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இடையில் சமந்தா கையில் மின்னிய மோதிரம் கூட நிச்சயதார்த்த மோதிரம் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சமந்தா. தனது படக்குழுவினர் அழைப்புகளைத் தவிர மற்ற அழைப்புகளைத் தவிர்த்து விடுகிறாராம்.

எப்போதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பவர், அதற்கும் ஓய்வு கொடுத்து விட்டார். பொதுவாக சமந்தா இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்போ ஜோக் சொன்னாக கூட சம்பிரதாயத்திற்கு சிரிக்கிறார் என வருத்தப்படுகிறார்களாம் நண்பர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X