பெரியவர்னாலும் ஓகே, சின்னவர்னாலும் ஓகே: அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங்
சென்னை: காதல் பற்றி ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளது தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் புதுப்படங்களில் ஒப்பந்தமாவதும், விலகுவது அல்லது விலக்கப்படுவதுமாக உள்ளார்.
இந்நிலையில் அவர் காதல் பற்றி தெரிவித்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்
உங்களை விட வயதில் பெரியவரை காதலிப்பீர்களா என்று ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொஞ்சமும் யோசிக்காமல் மனதில் பட்டதை தெரிவித்து அதிர வைத்துவிட்டார்.

சிறியவர்
காதலில் விழ காத்திருக்கிறேன். அவர் என்னை விட வயதில் பெரியவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி எனக்கு கவலை இல்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன் நடித்துள்ள பாலிவுட் படமான தே தே பியார் தே படத்தில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தில் தன்னை விட ரொம்ப பெரியரை காதலிப்பார் ரகுல். அது தான் கதையின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது
முதலில் தன் வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று கூறி வந்த ரகுல் ப்ரீத் தற்போது வயது ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கும், ராணாவும் காதலிப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











