ஒரே ஆபாசம்.. லவ் டுடே பட நடிகையிடம் அத்துமீறிய இரட்டைச் சகோதரர்கள்.. குடும்பத்துக்கும் குறி
சென்னை: நடிகையும், டப்பிங் கலைஞருமான ரவீனா ரவி, சமூக வலைத்தளங்களில் தன்னைத் தொடர்ந்து தொல்லை கொடுத்த இருவர் மீது கடுமையான புகார்களை முன்வைத்துள்ளார். 'லவ் டுடே, மாமன்னன்' போன்ற படங்கள் மூலம் நடிகையாகப் பிரபலமடைந்த இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நீண்ட பதிவில், தான் சந்தித்த மோசமான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் மீதான ஆன்லைன் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. ஆபாசக் கருத்துகள், தனிப்பட்ட அவதூறுகள், மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனப் பல்வேறு வகைகளில் தனிநபர்கள் மற்றும் பிரபலங்கள் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவது வழக்கமாகியுள்ளது.
தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் நேர்ந்த இந்தத் தொல்லைகள் குறித்துப் பொதுமக்களிடம் உதவி கோரிய ரவீனா, தனது பதிவில் குறிப்பிட்டதாவது: "பொதுமக்கள் கவனத்திற்கு, இதை அலட்சியப்படுத்த வேண்டாம். மூன்று ஆண்டுகளாக எங்களைத் துன்புறுத்தி வரும் ஒரு ஃபாலோயரிடமிருந்து என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னைப் பாதுகாப்பதற்காக இதை நான் பதிவிடுகிறேன். காவல்துறை புகார்களும் எச்சரிக்கைகளும் இதை நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையில் நான் அமைதியாக இருந்தேன்.

ஆபாச மெசேஜ்கள்: எனினும், சபரீஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும் என்னையும், என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் மெசேஜ்களிலும் கமெண்ட்களிலும் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். என்னை மட்டுமல்லாமல், எனக்கு நெருக்கமானவர்களையும் மோசமான வார்த்தைகள் மூலம் விமர்சிக்கிறார்கள்.
மோசமான சூழல்: என்னால் இந்த மோசமான சூழலை எதிர் கொண்ட என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நான் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் சட்டப்பூர்வமாக, காவல்துறையில் புகார் அளித்து அவர்களை தடுக்க முயற்சி செய்தோம். ஆனால் அந்த இரட்டை சகோதரர்களின் துன்புறுத்தல் நிற்கவில்லை. அவர்கள் இருவரும் பல சமூகவலைதள கணக்குகளில் இருந்து செயல்பட்டு, என்னையும், மற்ற பல பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்களையும் பின்தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.
பொய்கள்: அவர்களின் பதிவில், ஏற்கனவே சந்தித்தது, திருமணம் நிச்சயிக்கப்பட்டது போன்ற கற்பனைக் கதைகளையும் உருவாக்குகிறார். இதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவரது ஃப்ரோபைலை பிளாக் செய்ய, புகார் அளியுங்கள். அவரிடமிருந்தோ அல்லது அவரது சகோதரனிடமிருந்து ஏதேனும் செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் கமெண்ட்கள் அல்லது தனிப்பட்ட மெசேஜ்கள் என அவர்களுடன் சமூக வலைதளங்களில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications