யார் படமா இருந்தா என்ன.. கேரக்டர் தான் முக்கியம்.. தளபதி 68 படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

சென்னை: லவ் டுடே படத்தின் நாயகி இவானா தளபதி 68 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், அந்த படத்தில் நடிக்க அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Love Today heroine Ivana has refused to act in Thalapathy 68

விஜய் நடிப்பில், அண்மையில் வெளியான லியோ திரைபடத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்த போதும், வசூலில் அடித்து நொறுக்கியது.

தளபதி 68: இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தமிழையும் தாண்டி இந்தியளவில் வசூல் மன்னாக இருக்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம் ட்ராவல் கதை: இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் இது ஒரு டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில், பிரஷாந்த், நடிகர் பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி உள்ளனர். 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகன் இப்படத்தின் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். ஆக்ஷன் சீக்வன்ஸ், பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே தாய்லாந்தில் முதல் கட்ட ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நடிகை இவானா: இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் கதாநாயகியாக நடித்த நடிகை இவானா, முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஒரு வேளை அவரின் தங்கையாக இவானா நடிக்க இப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது. இது இவானாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு இது என்றும் பேசப்பட்டது.

மறுத்த நடிகை: ஆனால், நடிகை இவானா தளபதி 68 படத்தில் நடிக்கவில்லையாம், அவருக்கு வாய்ப்பு வந்தது உண்மை தானாம், ஆனால் அது தங்கை ரோல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இவானாவுக்கு வந்த ரோலில் நடித்தால் இனி அதே போன்ற கதாபாத்திரம் தான் தொடர்ந்து வரும் என்பதால், வேண்டாம் என கூறி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X