»   »  சென்னையில் தலைவர் படத்தை பார்ப்பதை விட வேறு சந்தோஷம் ஏது: சிலாகிக்கும் பாலிவுட் நடிகை

சென்னையில் தலைவர் படத்தை பார்ப்பதை விட வேறு சந்தோஷம் ஏது: சிலாகிக்கும் பாலிவுட் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தலைவர் ரஜினிகாந்தின் படங்களை பார்ப்பதே தனி சந்தோஷம் தான் என பாலிவுட் நடிகை மஹிமா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கானுடன் ஜோடி போட்டு நடித்தவர் மஹிமா சவுத்ரி. டென்னிஸ் வீரர் லியான்டர் பயஸின் காதலியாக வலம் வந்தவர். லியான்டருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அறிந்து அவரை விலகினார் மஹிமா.

அதன் பிறகு தொழில் வேறு ஒருவரை திருமணம் செய்த மஹிமாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மஹிமா சென்னை பற்றி கூறுகையில்,

சென்னை

சென்னை

நான் மாடலிங் செய்யும்போது விளம்பரப்படங்களில் நடிக்க பல முறை சென்னை வந்துள்ளேன். இங்கு டால்கம் பவுடர் விளம்பரங்களில் நடித்த நினைவு உள்ளது. எனக்கு சென்னையை சுற்றிப் பார்க்க ரொம்ப பிடிக்கும்.

ஈசிஆர்

ஈசிஆர்

ஈசிஆரில் உள்ள ஒரு ஹோட்டலில் என தாயுடன் தங்கியுள்ளேன். சென்னை சாலைகளில் காரில் நெடுந்தூரம் செல்லப் பிடிக்கும். எனக்கு சென்னையில் ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாக்கும். சென்னையில் வசிக்கும் என் தோழி என்னை கபாலி படத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். சென்னையில் ரஜினி படத்தை பார்ப்பதே தனி சந்தோஷம் தான்.

காஞ்சிபுரம் பட்டு

காஞ்சிபுரம் பட்டு

எனக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் பிடிக்கும். அதன் வண்ணங்கள் அழகாக இருக்கும். இங்கு தான் காஞ்சிபுரம் பட்டை பார்த்து வாங்க முடியும் என்று சென்னை புகழ் பாடுகிறார் மஹிமா.

English summary
Bollywood actress Mahima Chaudhary said that she loves watching Rajini's movies in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil