Swasika: படுக்கையறை காட்சியில் “லப்பர் பந்து” பட நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்!
சென்னை: அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சுவாசிகா. இப்படத்தில்,
தினேஷூக்கு மனைவியாகவும் ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராகவும் நடித்திருந்தார். தமிழில் இழுத்துப்போர்த்திக் கொண்டு வலம் வரும் இவர், மலையாளத்தில் தாராள கவர்ச்சி காட்டி படுக்கை அறை காட்சியிலும் நடித்து, அங்கு கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சுவாசிகா தமிழில் வெளியான வைகை என்ற படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுவாசிகா, இந்த படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். ஆனால், அந்த பெயர் ராசி இல்லாததால், சிவாசிகா என தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதன்பிறகு, கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் என படத்தில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு தமிழில் படம் இல்லாததால் மலையாள சினிமாவிற்கு தாவினார்.
அம்மா ரோலில்: மலையாளத்தில் அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர், மீண்டும் தமிழில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து படத்தில் நடித்தார். அந்த படத்தில், அட்டக்கத்தி தினேஷூக்கு மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் மற்றொரு நடிகை சஞ்சனா நடித்திருந்தாலும், நடிகை சுவாசிகாவிற்கு தான் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில், கணவர் தினேஷ், கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காததால், மைதானத்திற்கு வரும் சிவாசிகா, டிராக்டரை ஓட்டி மொத்த மைதானத்தையும் நாசமாக்கிவிடுவார். அந்த காட்சியை பார்க்கும் போது, யாருடா இந்த அம்மா என சொல்லும் அளவிற்கு நடித்திருந்தார்.

படுக்கை அறை காட்சி: லப்பர் பந்து படத்திற்கு பிறகு ரசிகர்கள் சிவாசிகாவை கொண்டாடி வரும் நிலையில், அவர், 2022 ஆம் ஆண்டு வெளியான Chathuram என்ற விவாகரமான படத்தில் நடித்துள்ளார். வயதான நபரை திருமணம் செய்து கொள்ளும் சிவாசிகா, இந்த வயதானவரின் கொடுமை தாங்காமல், அவரை நடித்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக்கி விடுகிறாள். பின் வயதான கணவரின் கண் முன்னே இளம் வயது நபரிடம் அத்துமீறி பழகுகிறாள். இந்த படத்தில் படுக்கை அறைகாட்சியில் மிகவும் கவர்ச்சியான நடித்துள்ளார். தற்போது, இந்த படத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இதைப்பார்த்த தமிழ் ஆடியன்ஸ், தமிழில் இழுத்துப்போர்த்திக் கொண்டு வலம் வரும் இவரா மலையாளத்தில் இப்படி நடித்து இருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்.
கணவருடன் நீச்சல் குளத்தில்: நடிகை சுவாசிகாவிற்கு கடந்த ஜனவரி மாதம் தான் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது நட்பு ஏற்பட்டு, பின் அது காதலாக மாறி இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அண்மையில், தனது கணவருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த சுவாசிகா, கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார்.
அண்மையில் இவர், மலையாள சினிமாவில் பெரும் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டியில் புகார் அளித்த ஒரு நடிகையை பற்றிய சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஹேமா கமிஷனில் அந்த நடிகை புகார் அளித்ததை தொடர்ந்து, சுவாசிகா, பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீது நெடும்பாசேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











