Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்!
நடிகை ரம்யா பாண்டியன் திடீர் என்று இணையம் முழுக்க வைரலாகி உள்ள நிலையில், தற்போது அவருக்கு நிறைய நல்ல செய்திகள் வருகிறதாம்!
Recommended Video
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் திடீர் என்று இணையம் முழுக்க வைரலாகி உள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நிறைய வருகிறதாம்!
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனார். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று வரவேற்பை பெற்றது.
ஆனால் ரம்யா பாண்டியன் அதற்கு பின் சரியான வாய்ப்புகள் எதையும் பெறவில்லை. முக்கியமாக பெரிய பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.. என்னம்மா அடையாளமே தெரியாம வளர்ந்துட்டே.. வைரலாகும் புகைப்படம்!
2 வருடம்
இதனால் கிட்டத்தட்ட 2 வருடம் அவர் எந்த விதமான வாய்ப்புகளும் பெறாமல் இருந்தார். 2 வருடங்களாக அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஜோக்கர் படத்தில் இவர் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்ததால் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
அதிரடி
இதனால் அதிரடியில் குதித்த ரம்யா பாண்டியன், வேகமாக தன் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு அவர் எடுத்த போட்டோ ஷூட்கள்தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக். மாறி மாறி சேலை கட்டி, கருப்பு வெள்ளை தொடங்கி கலர் புல் வரை இவர் வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரல்.
செம
அதிலும் இவர் இடுப்பு மடிப்பில் சிக்கி பல இளைஞர்கள் சின்னாபின்னமானார்கள். சிம்ரனுக்கு அடுத்து ரம்யா பாண்டியன்தான் இடுப்பு மூலம் வைரல் ஆனார். அதே போல இவருக்கு ரம்யா பாண்டியன் ஆர்மி, ரம்யா பாண்டியன் பேன்ஸ் கிளப் என்று நிறைய டிவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டது.
நிறைய வாய்ப்புகள்
இதையடுத்து தற்போது ரம்யா பாண்டியனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளதாம். வரிசையாக நிறைய இயக்குனர்கள் நல்ல கதைகளுடன் இவரை அணுகி வருகிறார்களாம். அதிலும் முன்னணி இயக்குனர்கள் சிலர் இவரது கால் சீட் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
முன்னணி நடிகர்
இதெல்லாம் போக முன்னணி நடிகர் ஒருவர் ரம்யா பாண்டியன் தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் என்கிறார்கள். ரம்யாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இப்படி நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் ரம்யா பாண்டியன் வீட்டு மொட்டை மாடியில் ஒரே அதிர்ஷ்ட மழைதான்!