லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் லக்‌ஷ்மி பாம் வரை.. அதிரவைக்கும் கியாரா அத்வானி.. பர்த்டே ஸ்பெஷல்!

மும்பை: இளம் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் 28வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஃபக்லி படத்தில் அறிமுகமான இவர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரிஸ் மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆனார்.

காஞ்சனா இந்தி ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விரைவில் அந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

பிரபலம் தந்த சுஷாந்த் சிங் படம்

பிரபலம் தந்த சுஷாந்த் சிங் படம்

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஃபக்லி படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாக நடித்த எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்‌ஷி தோனியாக நடித்ததன் பின்னரே பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை கியாரா அத்வானி. 1992ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்த இவர், இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஹேப்பி பர்த்டே கியாரா அத்வானி.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

4 இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல்ஸில் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கிய பாகத்தில் விக்கி கவுஷல் உடன் இணைந்து கியாரா அத்வானி நடித்திருந்தார். புதிதாக திருமணம் ஆன பெண்ணுக்கு, கணவனிடம் போதுமான சுகம் கிடைக்காததால் வைப்ரேட்டரை பயன்படுத்தும் பெண்ணாக நடித்து கியாரா அத்வானி உலகளவில் ஃபேமஸ் ஆனார்.

மகேஷ் பாபுவுடன்

மகேஷ் பாபுவுடன்

பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை கியாரா அத்வானியை, பரத் அனி நேனு எனும் மகேஷ் பாபுவின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ஜோடியாக ஆக்கினர். 2018ம் ஆண்டு வெளியான அந்த படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கியாரா அத்வானிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி தந்தது.

மாஸ்டர் படத்தில்

மாஸ்டர் படத்தில்

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த உடனே அடுத்ததாக பிகில் திரைப்படம் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக போகிறார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி என்கிற வதந்திகள் வைரலாகின. ஆனால், பிகில் படத்தில் நயன்தாராவும், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். தளபதி 65 படத்தில் வாய்ப்பு இருக்கா என்பதும் சந்தேகம் தான்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்

அர்ஜுன் ரெட்டி ரீமேக்

தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து கியாரா அத்வானி நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அந்த படம் பாலிவுட்டில் 350 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி, ஒரிஜினல் வெர்ஷனையே மிஞ்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

காஞ்சனா ரீமேக்

காஞ்சனா ரீமேக்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி உள்ள காஞ்சனா ரீமேக் படமான லக்‌ஷ்மி பாம், விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தமிழில் லக்‌ஷ்மி ராய் நடித்திருந்த ரோலில் இந்த படத்தில் கியாரா அத்வானி கவர்ச்சி பொங்க நடித்துள்ளார்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

லக்‌ஷ்மி பாம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்துள்ள நடிகை கியாரா அத்வானி, அடுத்ததாக இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது. ஆனால், இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 மில்லியன் ரசிகர்கள்

13 மில்லியன் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் எப்போதுமே ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கியாரா அத்வானிக்கு 13.3 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக உள்ளனர். தபு ரத்னானி எடுத்த நிர்வாண போட்டோஷூட்டை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, 2.4 மில்லியன் லைக்குகளை பெற்று பாலிவுட் பிரபலங்களை அதிரவைத்தார் கியாரா அத்வானி. லக்‌ஷ்மி பாம் படத்தைத் தொடர்ந்து இந்து கி ஜவானி, ஷேர்ஷா, புல் புலாயா 2 உள்ளிட்ட படங்களும் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X