லைக்காவின் வெப் சீரிஸ்.. தமிழில்.. கால் பதிக்கும் மீனா!

சென்னை: லைக்கா நிறுவனம் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ்ஸில் நடிகை மீனா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். திரைப்படங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கியுள்ள மீனாவை மீண்டும் வெப் சீரீஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பெருமையை லைக்கா நிறுவனம் பெறுகிறது

.டிவி சீரியல் எல்லாம் ஒதுங்கிப்போகும் காலம் வந்தாச்சு... இன்றைய இளசுகள் வெப்சீரிஸ்க்கு மாறிட்டு வர்றாங்க. அவங்க டேஸ்ட்டை புரிஞ்சுக்கிட்டு இப்போ படத்தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் வெப்சீரிஸ் தயாரிக்கப் போறாங்க. ஜீ 5ல இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகப்போகுது.

Lyca to produce a web series with Meena Zee5 original

சினிமா, சீரியலுக்கு அடுத்ததா ஓடிடி (OTT)தான் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு. உள்ளங்கையில் வைத்து உலகத்தையே பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களைக் கவரவே பல புதிய ஓடிடி இணைய தளங்கள் உருவாகின்றன. நெட்பிளிக்ஸ்க்கு போட்டியா ஜீ 5 பல வெப்சீரிஸ்ஸை ரிலீஸ் பண்றாங்க. அக்ஷரா ஹாசன் நடிக்கும் வெப்சீரிஸ் இன்னும் சில நாட்கள்ல ரிலீஸ் ஆகப்போகுது. இப்போ மீனா நடிக்கிற வெப்சீரிஸ் சுடச்சுட தயாராகி வருது. அதற்கான சூட்டிங்கும் ஆரம்பிச்சிருக்கு.

பசையுள்ள பல கார்ப்பரேட் தயாரிப்பாளர்களும் இந்த வெப்சீரிஸ் தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 சூர்யாவின் காப்பான், மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் உள்பட பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போ வெப் சீரிஸ் துறையில் காலடி வைக்க உள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ்ஸில் நடிகை மீனா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 90 களில் டிவி சீரியலில் நடித்து பின்னர் சினிமாவில் கோலோச்சியனார். மீண்டும் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக வலம் வருகிறார்.

Lyca to produce a web series with Meena Zee5 original

திரைப்படங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கியுள்ள மீனாவை மீண்டும் வெப் சீரீஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பெருமையை லைக்கா நிறுவனம் பெறுகிறது.. இந்த வெப்சீரீஸ்ஸை அருண்விஜய் நடித்து வரும் 'பாக்சர்' படத்தை இயக்கி வரும் விவேக் என்பவர் இயக்க உள்ளார்.

ஜீ 5க்காக உருவாக்கப்படும் இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான தொடராக உருவாகவிருக்கும் இந்த வெப் சீரீஸ், மீனாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X