ஏற்கனவே திருமணமானவரை மணந்தாரா கல்யாணி பிரியதர்ஷன்?.. தீயாக பரவும் வீடியோவால் பதறும் ரசிகர்கள்!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் முலம் நன்கு புகழ் பெற்றார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சின்னத்திரை நடிகரைத் திருமணம் செய்துகொண்டதாக தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கூறியதைப் போல, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் ஆவார். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கல்யாணி பிரியதர்ஷனுக்கு நடிப்பின் மீதும் தீராத மோகம் இருந்ததால், ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

kalyani priyadarshan sriram ramachandran

கல்யாணி பிரியதர்ஷனின் பெற்றோர்கள் என்னதான் மலையாள சினிமாவின் ஸ்டார்களாக இருந்தாலும் வேற்று மொழிகளில் நான்கு படங்களில் நடித்த பின்னரே மலையாளத்தில் கால் பதித்தார் கல்யாணி. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவருக்கும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றது.

kalyani priyadarshan sriram ramachandran

அதிர்ச்சி: ஏற்கனவே இந்தத் தகவலைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்க, வீடியோவும் சேர்ந்து வேகமாக பரவியதால், வீடியோவைப் பார்த்த ரசிகர்களுக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. பலர் இந்த வீடியோவைப் பார்த்ததும் தங்களது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமாக ஸ்டேட்டஸ் வைக்கத் தொடங்கிவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கணிசமான படங்களில் நடித்தாலும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு ரசிகர்கள் தென்னிந்தியாவில் ஏராளம்.

kalyani priyadarshan sriram ramachandran

விளம்பரம்: தகவல்கள் ஒருபுறம் இவ்வாறு பரவிவர, தகவலுடன் பரவி வரும் வீடியோ ஒரு விளம்பரப்படத்திற்காக படமாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 'யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன்ஸ்' என்ற ஒரு நகைக் கடையின் விளம்பரத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதற்காகத்தான் இந்த திருமண ஷூட்டிங் நடந்துள்ளதாம். இந்தத் தகவல் முதலில் வெளியே வரவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் திருமணம் நடந்துவிட்டது என்ற தகவல்தான் வேகமாகப் பரவியது.

kalyani priyadarshan sriram ramachandran

நிம்மதி: மேலும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமைப் பொறுத்தவரை ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனது கல்லூரி தோழியான வந்திதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியர் தற்போது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கல்யாணி பிரியதர்ஷன் திருமணம் எனப் பரவிய வீடியோ விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது எனத் தெரியவந்த பின்னர், ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசமாகியுள்ளனர்.

kalyani priyadarshan sriram ramachandran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X