»   »  வாவ்வ்... 'மாரி -2' படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

வாவ்வ்... 'மாரி -2' படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி'. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து 'மாரி -2' படப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார்.

பாலாஜி மோகன் இயக்கம் :

பாலாஜி மோகன் இயக்கம் :

அக்டோபரில் தொடங்கும் 'மாரி -2' படத்தை பாலாஜி மோகன் இயக்க, ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மலையாளத்திலிருந்து வில்லன் :

மலையாளத்திலிருந்து வில்லன் :

இப்படத்தின் வில்லனாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தனுஷ் தயாரித்திருக்கும் மலையாள படமான 'தாரங்கம்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார் டோவினோ தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மலர் டீச்சர் :

முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு பதிலாக 'ப்ரேமம்' புகழ் 'மலர் டீச்சர்' சாய் பல்லவிதான் 'மாரி 2'-வில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். சற்றுமுன்பு இயக்குநர் பாலாஜி மோகன் ட்விட்டரில் 'மாரி 2' படத்தின் நாயகியாக சாய் பல்லவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இசையமைப்பாளர் :

இசையமைப்பாளர் :

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

Read more about: dhanush தனுஷ்
English summary
Dhanush is producing and play a lead role in 'Maari 2' directed by Balaji Mohan. Malayalam's lead actor Dovino Thomas will play the villain of this film. SaiPallavi has been announced for 'Maari 2' as a heroine instead of Kajal Agarwal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil