மாரி 2: ஆனந்தியாக நடிக்கும் சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை: மாரி 2 படத்தில் சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாரி 2. படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

மாரி 2 படத்தில் வரும் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்றில் இருந்து தினமும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று பாலாஜி மோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி மாரி 2 படத்தின் ஹீரோயினான சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆனந்தி.
சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலாஜி மோகன் மற்றும் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications