பாவம் சாய் பல்லவி.. இருந்தாலும் மாரி 2 படக்குழு இப்டி பண்ணி இருக்கக்கூடாது !
மாரி 2 படப்பிடிப்பின் போது எல்லோருமே தன்னை கலாய்த்ததாக சாய் பல்லவி கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: மாரி 2 படப்பிடிப்பின் போது எல்லோருமே தன்னை கலாய்த்ததாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வரலட்சுமி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி விநோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பின் போது தன்னை எல்லோரும் கலாய்த்ததாகக் கூறினார்

ஆசை நிறைவேறியது:
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " அடுத்த பிரபுதேவா யாரு நிகழ்ச்சி மூலம் தான் என் திரைவாழ்க்கை ஆரம்பித்தது. அப்போது பிரபுதேவா சார் டான்ஸ் கொரியோவில் ஆட வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை மாரி 2ல் தான் நிறைவேறியது. அதற்காக நான் பாலாஜி மோகனுக்கு நன்றி சொல்லிக்கொள்வேன்.

கலாய்த்தனர்:
படப்பிடிப்பின் போது எல்லோருமே என்னை கலாய்ப்பார்கள். இப்போது யுவன் சங்கர் ராஜாவும் என்னை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். தனுஷ் எனது நடிப்பை மெருகேற்ற எனக்கு உதவியாக இருந்தார்.

செம ஜாலி:
ஷூட்டிங்கின் போது சென்னை சாலைகளில் ஆட்டோ ஓட்டியது செம ஜாலியாக இருந்தது. எல்லோரும் என்னை அருமையாக பார்த்துக்கொண்டனர். என் மீது அன்பு செலுத்தும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என அவர் கூறினார்.

ஆனந்தி:
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி, மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











