மீன்பாடி வண்டி ஓட்டும் மாவீரன் பட நடிகை.. சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியா நடிச்சவருக்கா இந்த நிலைமை?
சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மோனிஷா பிளஸிக்கு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு தங்கையாகவே நடிக்கும் சூப்பரான வாய்ப்பு கிடைத்தது. மாவீரன் படத்திற்கு பிறகு ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்புகள் ஏதும் பெரிதாக கிடைத்தது போல தெரியவில்லை.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மோனிஷா பிளஸி: குழந்தைப் பருவத்தில் இருந்தே விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த மோனிஷா கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். அந்த ஷோவில் அவர் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகளை கண்டு ரசிக்கவே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
சிவகார்த்திகேயன் தந்த வாய்ப்பு: டான் படத்தில் சிவாங்கிக்கு வாய்ப்புக் கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக மீண்டும் குக் வித் கோமாளியில் இருந்தே ஒரு பிரபலத்துக்கு சான்ஸ் கொடுப்போமே என நினைத்து மாவீரன் படத்தில் தனது தங்கையாக நடிக்க மோனிஷா பிளஸிக்கு சான்ஸ் கொடுத்தார்.
சிவகார்த்திகேயன் சிஸ்டர்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுக்களை மோனிஷா பிளஸி வென்றார். சீக்கிரமே இவரும் இவானா போல ஹீரோயின் ஆகி விடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மீன்பாடி வண்டி: வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் சுமார் 8 லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ள மோனிஷா பிளஸி கூடிய சீக்கிரமே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை சேர்க்க அதிரடியாக மீன்பாடி வண்டி மீது ஏறி அமர்ந்து தர லோக்கலாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் இவர் நடத்திய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
மார்க்கெட்டில் மாவீரன் நடிகை: மோனிஷா பிளஸி மார்க்கெட்டில் பழக்கடைகள் அருகே எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் மீன்பாடி வண்டி உடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மாவீரன் நடிகைக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா என கிண்டல் செய்து வருகின்றனர்.
சொந்தமாக கார்: மாவீரன் படத்தில் நடித்த பிறகு சமீபத்தில் மோனிஷா பிளஸி சொந்தமாக கார் வாங்கிய போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். கூடிய விரைவிலேயே அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கிண்றனர்.


Click it and Unblock the Notifications











