மாதம்பட்டி ரங்கராஜ் உடன் அதிதி ஷங்கர்.. பிறந்தநாளுக்கு பிரமாதமான வாழ்த்து.. சமைச்சி போட்டிருக்கலாம்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கடந்த ஜூலை 6ம் தேதி தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்பை படித்து முடித்த அதிதி ஷங்கர் டாக்டராக விருப்பம் இல்லை என்றும் ஆக்டராகத்தான் போகிறேன் என அடம்பிடிக்க அப்பா ஷங்கர் அவரை ஹீரோயினாக கார்த்தியின் விருமன் படத்தில் அறிமுகப்படுத்தினார்.

விருமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். அந்த படமும் 85 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த ஆண்டு அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா படம் அவருக்கு கைகொடுக்கவே இல்லை.
ஹாட்ரிக் வெற்றி மிஸ்ஸிங்: முத்தையா இயக்கத்தில் கார்த்தி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, மிஸ்கின், சுனில் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் ஹீரோயினாக நடித்து வெற்றி வாகை சூடினார். ஆனால், அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக நேசிப்பாயா படத்தில் நடித்து தோல்வியைத் தழுவினார். மே மாதம் வெளியான தெலுங்கு படமான பைரவம் படமும் அதிதி ஷங்கருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
ஒன்ஸ் மோர் படத்துக்காக வெயிட்டிங்: விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ்மோர் திரைப்படம் இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் வெளியாக முடியாமல் தவித்து வரும் அந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 31 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்த நிலையிலும், அதிதி ஷங்கர் கைவசம் புதிதாக எந்தவொரு படமும் இல்லை என்கின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்தநாள் வாழ்த்து: அதிதி ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் சில உறவுகள் ஆஃப் ஸ்க்ரீனிலும் ஆன் ஸ்க்ரீனிலும் அப்படியே மாறாமல் இருக்கும், என் அன்பு தங்கச்சி அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் பதிவிட, அதை பார்த்துவிட்டு தேங்ஸ் அண்ணா என கமெண்ட் அடித்துள்ளார் அதிதி ஷங்கர்.
சூர்யா சேதுபதிக்கு முன்னாடியே: விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக பீனிக்ஸ் படத்தில் அறிமுகமான நிலையில், அவரை டார்கெட் செய்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே நிலைமை தான் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கருக்கும் ஏற்பட்டு வருவதாகவும் பிரபலங்களின் வாரிசுகள் எல்லாம் எளிதில் முன்னணி நடிகர்களாக மாறிவிடுவதால், தான் அவர்களுக்கு எதிராக இப்படி நெகட்டிவிட்டிகள் பரவி வருவதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன. அதிதி ஷங்கர் செம க்யூட்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களை கூட பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்ததாக அவர் யாருடன் நடிக்கப் போகிறார் என்கிற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











