இவங்களோட ஒரே குழப்பமா இருக்குங்க... ஹீரோயின் அப்செட்

By

சென்னை: சினிமாவில் சிலர் சொல்வதைப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது நடிகை மது ஷாலினி தெரிவித்துள்ளார்.

தமிழில், பாலா இயக்கிய அவன் இவன், சசிகுமார் நடித்த பிரம்மன், கமல்ஹாசனின் தூங்காவனம் உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை மது ஷாலினி. பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

ஏன் இந்த இடைவெளி என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லையே... தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார் மது ஷாலினி.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

அவர் மேலும் கூறும்போது, எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், அவை அனைத்துமே ஒரே மாதிரியான கேரக்டர் கொண்டவையாக இருந்தன. நடித்த கேரக்டரிலே நடிக்க வேண்டாம் என்பதால் அவற்றில் நடிக்கவில்லை.

இயக்குனர்களைச் சந்தித்தால்

இயக்குனர்களைச் சந்தித்தால்

இருந்தாலும் மற்ற மொழிகளில் பிசியாகத்தான் நடித்து வருகிறேன். எனக்கு ஒரு விஷயம் இங்கு புரியவில்லை. எப்போதாவது சில இயக்குனர்களை விழாக்களிலோ அல்லது எங்காவதோ சந்திக்கும்போது, 'இந்த கேரக்டருக்கு உங்களைத்தான் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். நீங்கள் பிசியாக இருப்பீர்கள் என்று விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள்.

பார்க்கவே முடியலையே

பார்க்கவே முடியலையே

இது ஏன் என்று தெரியவில்லை. பிறகு நான் தமிழில் நடிக்கும்போது, உங்களை இங்க பார்க்கவே முடியலையே என்கிறார்கள். நான் வேறு மொழிக்குச் சென்றதும் நீங்க இல்லைன்னா என்ன, உங்க படங்கள் பேசுகின்றன என்கிறார்கள். எனக்கு இப்படி பேசுவது குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு விஷயத்தை

ஒரு விஷயத்தை

இப்போது ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டேன். நான் நடிகை, எந்த மொழியில் இருந்து வந்தாலும் ரசித்து நடிக்க வேண்டியது என்பதுதான் அது என்கிறார் மது. இவர் தமிழில் இப்போது பஞ்சராஷரம் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X