»   »  மதுமிதாவும் சூட்சுமமும்!

மதுமிதாவும் சூட்சுமமும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடைக்குள் மழையில் களேபரமாக அறிமுகமாகி பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆந்திரத்து கவர்ச்சி குடைமிளகாய், மதுமிதா எதிர்பார்ப்புக்கேற்ப பெரிதாக ரவுண்ட் அடிக்கவில்லை.

இப்போது அவர் கையில் இருப்பது இ-3 (இளமை இதோ இதோ), இங்கிலீஸ்காரன், பாசில் இயக்கப் போகும் உன்னோடு ஒருநாள் ஆகிய 3 படங்கள்தான்.

அதிலும் மதுமிதாவுக்கு முக்கியமான ஹீரோயின் ரோல் இல்லை. இங்கிலீஸ்காரனில் நமீதா இருக்கிறார். அவரை சமாளித்துகரையேற வேண்டிய கட்டாயத்தில் மதுமிதா.

அதே போல இ-3யிலும் இரு மும்பை பார்ட்டிகள் போட்டிக்கு இருக்கின்றன. சாணக்யாவில் சரத்குமாருடன் வந்த சான்ஸ்அப்படியே கை நழுவிப் போய்விட்டது.

இயக்குனர் பாசில் இயக்கும் உன்னோடு ஒரு நாள் படத்தின் சூட்டிங் எப்போது தொடங்குமோ தெரியாது. இது லோ பட்ஜெட்படம். இதனால் சம்பளம் ரொம்பக் கம்மி.

இப்படி, குறைந்த அளவிலான படங்களில் நடித்தாலும், பட வாய்ப்புக்கள் கைவிட்டுப் போனாலும் மதுமிதா படு ஜாலியாகத்தான்இருக்கிறார்.

பட யூனிட்டில், எல்லோருடனும் இயல்பாக, கலகலப்பாக பழகும் மதுமிதா வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் படு குஷியாகிவிடுகிறாராம். படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர்கள் மத்தியில் புகுந்து விடும் மதுமிதா, அவர்களிடம் படு ஜாலியாக பேசுகிறார்.அவர்களுடன் எந்த பந்தாவும் இல்லாமல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

சமீபத்தில் சென்னையிலேயே மகா நெரிசல் மிகுந்த தெருவான ரங்கநாதன் தெருவுக்குள் திடீரென நுழைந்தார் மதுமிதா. ஒருநடிகை (பெரியவரோ, சைடு நடிகையோ) சென்னைத் தெருவில் இறங்கி நடந்தால் நம்ம ரசிக சிகாமணிகள் சும்மாஇருப்பார்களா. அவரை மொய்த்து எடுத்துவிட்டார்களாம்.

அமுதே படம் ரொம்ப டிலே ஆனதால் அதில் நடித்த எல்லோருமே முகம் சுளிக்க, மதுமிதா மட்டும் நல்ல ஒத்துழைப்பைத் தந்துவருகிறாராம்.

சம்பள விஷயத்திலும் மதுமிதா ரொம்ப விட்டுக் கொடுத்தே போகிறார். ரூ. 12 லட்சத்தில் ஆரம்பிக்கும் மதுமிதா, அப்படியேஇறங்கி, ஏறி, இறங்கோ இறங்கு என இறங்கி சில லகரங்களுக்கு படிந்துவிடுகிறார். இவ்வளவு கொடுத்தால் தான் நடிப்பேன்என்று கறார்தனம் எல்லாம் செய்வதில்லை.

இப்படி ஒத்துழைப்புத் தந்து, விட்டுக் கொடுத்தும் போகும் மதுமிதாவுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போனது ஆச்சரியம் தான்.

தமிழில் மட்டுமில்ல, அவரது தாய் மொழியான தெலுங்கிலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லையாம்.

இதனால் ஒரு ஸ்டில் செஷன் நடத்தி தனது தாராள போஸ்களை ஒரு ரவுண்டுக்கு விடும் வழக்கமான, வாய்ப்பிழந்த,நடிகைகளின் பார்முலாவை கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் மதுமிதா.

இதற்கிடையே தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதாவுக்கு தமிழில் எப்படியாவது பிரேக் கிடைக்கச் செய்ய பார்த்திபனும்அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில் மதுமிதாவைக் கூப்பிட்டு கோலிவுட்டின் சூட்சுமங்கள் சிலவற்றை சொல்லித் தந்தாராம்.

அது என்ன சூட்சுமமோ!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil