போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்த மாதுரி தீட்சித்: அதிர்ச்சி கொடுத்த ரசிகர்
போபால்: போபால் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை விஐபி பகுதியில் இருந்து வெளியேறுமாறு அதிகாரி ஒருவர் தெரிவித்தாராம்.
பாலிவுட்டின் கனவுக் கன்னியாக இருந்தவர் மாதுரி தீட்சித். பாலிவுட் கொண்டாடிய மாதுரி திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில் அவர் ஜாகையை அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு மாற்றிவிட்டார்.

குலாப் கேங்
சவுமிக் சென் இயக்கத்தில் குலாப் கேங் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாதுரி. மார்ச் 7ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

போபால்
குலாப் கேங் படத்தின் விளம்பர நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் மாதுரி கலந்து கொண்டார்.

விமான நிலையம்
விளம்பர நிகழ்ச்சி முடிந்ததும் மாதுரியும், படத்தின் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹாவும் மும்பை செல்ல போபாலில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றனர்.

அதிகாரி
மாதுரியை பார்த்த விமான நிலைய அதிகாரி ஒருவர் அவரை வி.ஐ.பி. பகுதிக்கு அழைத்துச் சென்று அமருமாறு கூறியுள்ளார். மாதுரியும், அனுபவ் சின்ஹாவும் வி.ஐ.பி. பகுதியில் அமர்ந்து விமானத்திற்காக காத்திருந்தனர்.

போட்டோ
அந்த அதிகாரி மாதுரியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மாதுரியோ முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.

வெளியே போ
மாதுரி களைப்பாக உள்ளார். புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியாது என்று அவரின் மேனேஜர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரு புகைப்படத்திற்கு தன்னுடன் போஸ் கொடுக்க மறுத்த மாதுரி மற்றும் அனுபவை அந்த அதிகாரி வி.ஐ.பி. பகுதியில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











