இந்திரா காந்தி வேடத்தில் மாதுரி தீட்சித்

இந்தியாவைச் சேர்ந்தவரான பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிருஷ்ணா ஷா, இந்திரா காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில், 'மதர்- தி இந்திரா காந்தி ஸ்டோரி' என்ற படத்தை இயக்க உள்ளார்.
இந்திரா வேடத்தில் மாதுரி தீட்சித், 2ம் எலிசபத் ராணியாக ஆஸ்கர் விருது நாயகி ஹெலன் மிர்ரென் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
40 மில்லியன் பவுண்ட் பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படத்தில், பிரிட்டிஷ் நடிகை எமிலி வாட்சன், ஆல்பர்ட் ஃபின்னி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதுபற்றி இயக்குனர் கிருஷ்ணா ஷா கூறுகையில், 'இந்த படம், பட்ஜெட் - தரம் இரண்டிலும் எனது வாழ்நாள் சாதனையாக அமையும். ஒரு கதையை சொல்வதற்காக 20 ஆண்டுகளாக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்திராவின் கதைக்குள் எந்த வகையில் நுழைவது என ஆழந்து சிந்தித்த போது, அவர் தன் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் அன்னையாக சிறந்து விளங்கியது என்னை கவர்ந்தது.
இந்தியாவின் நன்மைக்காக அவர் வெளிப்படுத்திய கடுமை கலந்த அன்பு முக்கியமானது. இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.


Click it and Unblock the Notifications











