அழகுச் சிலை மாதுரிக்கு லண்டனில் மெழுகுச் சிலை
பாலிவுட்டின் ராணியாக இருந்தவர் நடிகை மாதுரி தீக்ஷித்(44). அவர் நடனமாடினால் அனைவரும் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். அத்தகைய வசீகரம் உள்ளவர். மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்ற அவர் தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் உலகப் பிரபலங்களுக்கு மெழுகுச் சிலை செய்து வைப்பது வழக்கம். தற்போது அந்த அருங்காட்சியகத்தில் மாதுரிக்கு மெழுகுச் சிலை வைத்துள்ளனர். அந்த சிலையை கடந்த புதன்கிழமை அவர் திறந்து வைத்தார். அச்சு, அசப்பில் தன்னைப் போன்றே இருக்கும் அந்த சிலையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன், ஷாருக் கான், கரீனா கபூர் ஆகியோரது மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாதுரி கூறியதாவது,
எனது சிலையை நானே திறந்து வைத்தது மிகவும் த்ரில்லாக உள்ளது. அவர்கள் எனது சிலையை மிகவும் அழகாக செய்துள்ளனர். சில பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் எனக்கு பிடித்த சில ஹீரோக்களின் சிலைகளுடன் எனது சிலையும் இருப்பதில் பெருமையாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications












