கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!

கொச்சி : வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை மடோனா செபாஸ்டின்.

நடிகை பாடகி என பன்முகத் திறமைகள் கொண்ட இவருக்கு மலையாளத்தில் இருப்பதை விட தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கவன்,காதலும் கடந்து போகும் மற்றும் ஜூங்கா ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மேலும் ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் இப்பொழுது கடற்கரையில் காற்று வாங்கியவாறு அழகான ஜிலேபி கொண்டையை காட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

கிளைமாக்ஸில்

கிளைமாக்ஸில்

மலையாள நடிகைகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு வரும் நிலையில் மலையாள திரைப்படங்கள் சிலவும் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்தது. நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி லீட் ரோலில் நடித்திருக்க நடிகை மடோனா செபாஸ்டின் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கடைசி கிளைமாக்ஸில் படத்தை தூக்கி நிறுத்தி இருப்பார்.

சிறந்த பாடகியாகவும்

சிறந்த பாடகியாகவும்

பிரேமம் திரைப்படம் கொடுத்த மாபெரும் அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வர விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், கவன் மற்றும் ஜூங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பாடல்களையும் பாடி சிறந்த பாடகியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

பக்கா வில்லேஜ்

பக்கா வில்லேஜ்

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கிய வானம் கொட்டட்டும் படத்தைத் தொடர்ந்து இப்போது சசிகுமாரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் பல படங்கள் ஒப்பந்தமாகி வர நடிகர் நானியின் ஷ்யாம் சிங் ரெட்டி-யில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தலை நிறைய மல்லிகைப்பூவுடன்

தலை நிறைய மல்லிகைப்பூவுடன்

மலையாளம்,தமிழ்,தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் மடோனா செபாஸ்டின் வெள்ளை டிரஸ்ஸில் கடற்கரையில் காற்று வாங்கியவாறு ஜிலேபி கொண்டையில் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் கடலை ரசித்தவாறு வெளியிட்டுள்ள செம கூலான புகைப்படம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு "என்னடா ஜிலேபி கொண்டை மாதிரி இருக்கு" என வர்ணிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X