நடுக்காட்டில் ஹாயா ஒரு கிளிக்.. மடோனா செபாஸ்டினின் வேற லெவல் பிக்ஸ் !
கொச்சி : நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது நடுக்காட்டில் அனைவரும் அசந்து போகும் வகையில் ருசிகரா போட்டோ ஷூட் நடத்தி அசத்தி வருகிறார்.
சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் நடித்துள்ள இவர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் லாக்டவுனில் பல்வேறு போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த மடோனா செபாஸ்டின் இப்பொழுது நடுக்காட்டில் வித்தியாசமாக செய்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழில் ஹீரோயினாக
மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் சக்கைப்போடு போட்ட பிரேமம் திரைப்படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகை மடோனா, தொடர்ந்து தமிழில் ஹீரோயினாக பல படங்களில் வலம் வந்து இருக்கிறார்.

கொம்பு வச்ச சிங்கம்டா
காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா என தொடர்ந்து விஜய் சேதுபதி திரைப்படங்களில் நடித்து வந்த மடோனா செபாஸ்டின் இப்பொழுது முதன்முறையாக நடிகர் சசிகுமார் உடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிறந்த பாடகியாக
ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மடோனா மலையாளத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடர்ந்தக் காட்டில்
லாக் டவுனில் விதவிதமான கவர்ச்சி உடையில் வியக்கத்தக்க பல போட்டோ ஷூட்களை நடத்தி வித்தியாசமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த மடோனா செபாஸ்டின் இப்பொழுது அடர்ந்தக் காட்டில் செய்திருக்கும் போட்டோ ஷூட் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

வசீகர புகைப்படங்கள்
ஆளில்லாத நடுக்காட்டில் சிறிய படகில் கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு வித்தியாசமான கோணங்களில் அனைவரும் ரசிக்கும் வகையில் வசீகர புகைப்படங்களை வெளியிட்டுள்ள மடோனாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











