பிரேமம் நாயகியின் ஜில்லென்று ஒரு போட்டோஷூட்..ஏங்கிய ரசிகர்கள்!
கொச்சி : லாக் டவுனில் ஜில்லென்று ஒரு போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டின்.
Recommended Video
பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.


நடிகை மற்றும் பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள மடோனா செபாஸ்டின் தற்பொழுது வெளியிட்டுள்ள சிலிர்க்க வைக்கும் போட்டோ ஷூட் கிளிக்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய தாக்கத்தை

பிரபலமான நடிகையாகவும் அதே சமயத்தில் பாடகியாகவும் இருந்துவரும் மடோனா செபாஸ்டின் தமிழ், மலையாள ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர். பிரேமம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ரசிக்கும் படியான நடிப்பின்
பிரேமம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் மடோனா செபாஸ்டின், தமிழ் ரசிகர்களை கவர்ந்ததுடன் பல நேரடி தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து புகழ் பெற்று வந்தார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும், கவன், பா பாண்டி, ஜூங்கா மற்றும் சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது ரசிக்கும்படியான நடிப்பின் மூலம் ரசிகர்களை திரைப்படங்களில் மகிழ்வித்து வந்த மடோனா சமூக வலைதளங்களிலும் பல சிலிர்க்கவைக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

குட்டியான கவர்ச்சி உடை

தனது கொஞ்சும் சிரிப்பின் மூலம் ரசிகர்களை சில்லு சில்லாக உடைத்து வரும் இவர், இயற்கை கொஞ்சும் அழகில் முட்டி தெரிய குட்டியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள பல்வேறு புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து அதை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் ரசித்தவாறு வைரலாக்கி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











