கல்யாண கோலத்தில் பிரேமம் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொச்சி : மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டின் இப்பொழுது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் கவன், காதலும் கடந்து போகும், ஜூங்கா உள்ளிட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இப்பொழுது சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டின் சற்றும் எதிர்பாராத வகையில் வெளியிட்டுள்ள கல்யாண புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடகியாகவும்

பாடகியாகவும்

நடிப்பால் மட்டுமல்லாமல் இனிமையான குரலாலும் ரசிகர்களை மயக்கி வரும் மடோனா செபாஸ்டின் பல திரைப்படங்களில் நடித்தும், பாடல்களைப் பாடி பாடகியாகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சசிகுமாருடன் இணைந்து

சசிகுமாருடன் இணைந்து

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டின் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்ததை அடுத்து இப்பொழுது சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சில காட்சிகள் மட்டுமே

சில காட்சிகள் மட்டுமே

நிவின் பாலிக்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டின் நடித்த முதல் திரைப்படத்திலேயே சில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அதில் அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

அள்ளி தெளித்து

அள்ளி தெளித்து

அங்கொன்றும் இங்கொன்றுமாக கவர்ச்சி காட்டி நடித்து வந்த மடோனா செபாஸ்டின் இப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களிலும் கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.

கல்யாண கோலத்தில்

கல்யாண கோலத்தில்

அவ்வாறு வெளியிடும் புகைப்படங்கள் டிரெண்ட்டாகி வரும் நிலையில் இப்பொழுது அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் கல்யாண கோலத்தில் மணமகன் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மிகவும் பிடித்த படங்கள்

மிகவும் பிடித்த படங்கள்

கிரிஸ்டியன் மணப்பெண் கோலத்தில் இருக்கும் மடோனா அந்த புகைப்படங்கள் திருமண விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது எனவும் அவை அனைத்தும் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்கள் என்பதால் பதிவிட்டு இருப்பதாகக் கூறிய பின்பே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். இருப்பினும் கல்யாண கோலத்தில் சும்மா சொல்லக்கூடாது மடோனா செபாஸ்டின் ரொம்பவே அழகாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X