அச்சச்சோ.. உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய.. மெட்ராஸ் பட நடிகையை நியாபகமிருக்குதா?

சென்னை: மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

நடிகை கேத்ரின் தெரசா ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார்.

madras movie heroine catherine teresa latest photo

நடிகை கேத்ரின் தெரேசா: இதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்தார். இதில் வட சென்னை பெண்ணாக அவரது அபார நடிப்பு பாராட்டை பெற்றது. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்தார்.

பட வாய்ப்பு இல்லை: இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. கதக்களி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியான அருவம் திரைப்படம் தான் கேத்தரின் தெரசாவுக்கு தமிழில் இப்போதைக்கு கடைசி படமாக உள்ளது. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், புதிய படங்களில் அவர் புக் ஆகவே இல்லை.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்: பெண்களின் கனவுக்கண்ணன் விஜய்தேவரகொண்டாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் அசர வைத்திருந்த கேத்தரின் தெரசா அதில் விஜய் தேவரகொண்டா உடன் உச்சகட்ட ரொமான்ஸில் நடித்து பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

ஷாக்கான ரசிகர்கள்: தற்போது இவருக்கு படவாய்ப்பு இல்லாததால், அவரது உடல் எடை கூடி பருமனாக மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒரு குச்சி, ஒரு குல்பி என ஆடி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நடிகை கேத்தரின் தெரசாவா இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து நொந்து போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X