Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒற்றை காலில் நிற்கும் கார்த்தி பட நடிகை..ஏன்னு தெரியுமா?
சென்னை: மெட்ராஸ் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆன கேத்ரின் தெரசா ஒற்றை காலில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
மஞ்சள் நிறத்தில் மாடர்ன் உடை அணிந்து அவர் கொடுத்து இருக்கும் போஸ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
" title="நல்ல காமெடி.. ஃபைனல்ஸ் போற 2 பேர் நாமினேஷன்ல வர்றாங்களா... விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!" />நல்ல காமெடி.. ஃபைனல்ஸ் போற 2 பேர் நாமினேஷன்ல வர்றாங்களா... விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் அதே உடையுடன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.அவரது நடையை பாராட்டி அவரது ரசிகர்கள் குதூகலத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மெட்ராஸ் நாயகி
ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் கேத்ரின் தெரசா.துபாயில் பிறந்த இவர், சினிமா,நடிப்பு மீது கொண்டுள்ள ஆர்வத்தால் நடிகையாக மாறினார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு, மெல்ல மெல்ல சினிமாவில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது .இப்போது தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.சென்னை வாழ்க்கையை எதார்த்தமாக திரையில் காட்டிய திரைப்படம் தான் மெட்ராஸ்.கார்த்தி நாயகனாக நடிக்க அவருக்கு கோடியாக நடித்தார் கேத்ரின் தெரசா. பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கினார்.எதார்த்தமான கதையும்,நடிப்பும் இந்த படத்தை வெற்றி பெற செய்தது.

லிஸ்ட் பெருசு
மெட்ராஸ் வெற்றிக்கு பிறகு கதகளி படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும்,கணிதன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும்,கடம்பன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமானார்.ஆனால் எந்த படமும் சொல்லும் வெற்றியை கொடுக்கவில்லை என்பதால்,தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பினார்.

ராஜாவாதான் வருவேன்
கதாநாயகன்,கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன்,நீயா 2, அருவம் போன்ற படங்களில் நடித்தார்.இதில் சித்தார்த்துடன் நடித்த அருவம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது .உணவு சுகாதார அதிகாரியாக சித்தார்த்தும், பள்ளி ஆசிரியையாக வரும் கேத்ரின் நல்ல வரவேற்பை பெற்றனர்.

சூப்பர் போட்டோஸ்
எப்போதும் சமூகவலைத்தளத்தில் தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வரும் கேத்ரின்,சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.அழகான மஞ்சள் நிற உடையில் ஒற்றை காலில் நிற்கும் புகைப்படமும்,விதவித போஸ் என்று ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.மேலும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கேரவனில் இருந்து இறங்கி நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடீயோவையும் பகிந்துள்ளார். இதை பார்த்த கேத்ரின் ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.மேலும் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி தெலுங்கிலேயே மூன்று படங்கள் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.