»   »  வெறும் 5 கேட்கும் மது!

வெறும் 5 கேட்கும் மது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுமிதா தனது சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இப்போது ரூ. 5லட்சத்துக்கு வந்துவிட்டார்.

குடைக்குள் மழை நாயகி மதுமிதா சில முக்கியமான கொள்கைகளை பிடித்துக்கொண்டு அழுததால், கோலிவுட்காரர்களின் கடாட்சம் அவருக்குக் கிட்டவே இல்லை.

முதல் படத்தில் ஏகமாக கிளு கிளு காட்டிவிட்டு பின்னர் இனிமேல் ஓவர் கிளாமர்காட்ட மாட்டேன் என்று அவர் போட்ட கண்டிஷன் அவரது கேரியருக்கு வேட்டுவைத்து விட்டது. இதையடுத்து ஏராளமாக குளுகுளு ஆல்பங்களைத் தயார் செய்து நான் எப்படியும்நடிக்கத் தயார் என்று ஓலை மேல் ஓலை அனுப்பிப் பார்த்தார் மதுமிதா. ஆனால், அது டூ லேட்.

இதையடுத்து கிடைக்கிற ரோல்களில் நடித்து வருகிறார். தமிழில் இப்போது நடித்துவரும் நாளை படத்தில் நல்ல கேரக்டராம். எனது நடிப்புக்கேற்ற அட்டகாசமானகேரக்டர், அசத்தலாக நடித்து வருகிறேன். இது எனக்கு பிரேக் கொடுக்கும் என்றுநம்பிக்கையாக கூறுகிறார் மதுமிதா.

இந் நிலையில் விக்ராந்துக்கு ஜோடியாக பட்டாசு என்று ஒரு படத்தில் புக்ஆகியிருக்கிறார். ஆனால், சூட்டிங் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்படம் கியாரண்டி இல்லை என்பதால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனகிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார் மது.

இதற்கிடையே சச்சின் படத்தைய இயக்கிய ஜான், ஒரு ஆங்கில குறும் படத்தைதயாரிக்கிறாரம். அவார்டுக்காக எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடிக்க மதுவைக்கேட்டுள்ளார்.. அவார்டு படமா? போரடிச்சிருமே என்று ரொம்பவே யோசித்துவிட்டுஓ.கே. சொன்னாராம்.

ஹீரோவாக நந்தா நடிக்கும் இந்தப் படத்தில் இந்தியாவில் இருந்து கொழும்புசெல்லும் நிருபராக நடிக்கப் போகிறார் மதுமிதா.

நல்ல பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துவிட்டாராம் மது. எவ்வளவு தெரியுமா? வெறும் 5 லட்சம்தான் சம்பளம் கேட்கிறாராம்.

இதையும் குறைக்கச் சொல்லி பேரம் பேசும் சில தயாரிப்பாளர்களும் இருக்கத்தான்செய்கிறார்களாம். 5 லட்சம் சம்பளம் கூட தர முடியாத இவர்கள் எல்லாம்எப்படித்தான் படத்தை எடுத்து முடிப்பார்களோ என்று தலையில் அடித்துக்கொள்கிறார் மதுமிதா.

நாளை படம் வெளி வந்து தன்னைக் காப்பாற்றட்டும் அப்புறம் சம்பளத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நினைப்பில் இருக்கிறாராம் மதுமிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil