»   »  எஸ்கேப் ஆன மேக்னா

எஸ்கேப் ஆன மேக்னா

Subscribe to Oneindia Tamil

விஜய டி.ராஜேந்தர் செம கடுப்பில் இருக்கிறார்.

அடுத்த மும்தாஜ் என அவரால் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்ட மேக்னா நாயுடு, வீராசாமி படத்திலிருந்து எஸ்கேப்ஆகிவிட்டாராம். இதனால் அப்செட்டான தாடிக்காரர், அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்.

மோனிஷா என் மோனாலிசா படத்தில் மும்தாஜை மும்பையிலிருந்து இறக்குமதி செய்தார் டி.ராஜேந்தர். இதே மும்பையிலிருந்துதான் தனது வீராசாமிக்கும் மேக்னா நாயுடு என்ற குஜிலியை களத்தில் இறக்கினார்.

இதில் மேக்னாவுக்கு ஜோடியாக வழக்கம் போல அட்ரஸ் இல்லாத அஜீஸ் என்பவர் நடித்து வருகிறார்.

இதோ அடுத்த மும்தாஜ் ரெடி என்று மேக்னா நாயுடுவை பரபரப்பாக அறிமுகம் செய்தார் டி.ஆர். இந்தப் படத்தில் நடிப்பதற்காகபல படங்களின் வாய்ப்புகளை இவர் உதறித் தள்ளி விட்டார் என்றெல்லாம் புருடா விட்டார்.

மேக்னாவும் தன் மீது டி.ஆர். வைத்துள்ள நம்பிக்கை வீணாகி விடக்கூடாதே என்று, போதும் போதும் என்ற அளவிற்குகவர்ச்சியை அள்ளித் தெளித்து வந்தார். கோலிவுட் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்று சத்தியம் செய்துவந்தது போல வீராசாமி டீமை கலங்கடித்து வந்தார்.

அரசியல் பாதி, சினிமா பாதி என படத்தை ஆமை வேகத்தில் எடுத்து வந்தார் டி.ஆர். எவ்வளவு நாளைக்குத் தான் ஒரே படத்தில்நடிப்பது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் மேக்னா.

படப்பிடிப்பின் இடையே ஒரு நாள் திடீரென இவர் எஸ்கேப் ஆகிவிட்டார். இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என்றுடி.ஆரும் ஏமாந்தது தான் மிச்சம். போனவர் போனவர் தான். எட்டிப் பார்க்கவே இல்லை.

படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் வேறு என்ன செய்ய முடியும். படப்பிடிப்பை நிறுத்தி விட்டு இப்போது மேக்னாவை தேடஆரம்பித்துள்ளாராம் டி.ஆர்.

ஆனால் அவரோ இந்தி, தெலுங்கு என பிசியாக இருக்கிறாராம்.

ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினான விபூதி என்ற தர்ஷிணியும் ஓடிப் போய்விட்டதுநினைவுகூறத்தக்கது. இதனால் தர்ஷணியின் காட்சிகளை எடுத்தவரை வைத்துக் கொண்டு மேக்னாவை முக்கியமாக்கி படத்தைஎடுத்துக் கொண்டிருந்தார் விஜய டி.ராஜேந்தர்.

இப்போது மேக்னாவும் எஸ்கேப். ஒரு படத்தை 3 வருஷமாக எடுத்தால், அப்புறம் எப்படி வேறு படத்தில் நடிக்கிறதாம் என்றுகேட்கிறது மேக்னா தரப்பு. மேலும் படத்தில் நடிக்க வந்தபோது இருந்த மாதிரியே உடம்பையும் ட்ரிம் ஆக வைத்திருக்கவேண்டும் என்று தாடிக்காரர் கண்டிசன் வேறு போட்டாராம்.

இதனால் தான் மேக்னா சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார் என்கிறார்கள். இப்போது தெலுங்கு, இந்தி சினிமாக்களில்சின்னச் சின்ன ரோல்களில் நடித்தபடியே சாஹாரா டிவியில் கம்பியரிங்கும் பண்ண ஆரம்பித்துவிட்டார் மேக்னா.

இந்தியில போய் ஹீரோயினாக நடித்தாலும் பரவாயில்லை. அங்கே துண்டு துக்கடா ரோலில் நடிக்கிறார். அதையாவதுபொறுத்துக்கலாம்.. இப்போ டிவியில கம்பியரிங் செய்ய போயிட்டாரே.. என்று கோபத்தில் தாடிக்காரர் தலையை சிலு சிலுசிலுவென சிலுப்பிக் கொண்டிருக்கிறாராம்.

இரண்டு ஹீரோயின்கள் ஓடிப் போய்விட்டாலும் இரண்டு மட்டும் அப்படியே கல்லாக நிற்கின்றனர். அவர்கள் தான் ஹீரோ அஜீசும்மும்தாஜூம்.

டி.ராஜேந்தர் இந்தப் படத்தை இன்னும் 3 வருஷம் அல்ல, 10 வருஷம் எடுத்தாலும் அஜீஸ் கம்பாக நிற்க ரெடியாம். அதேபோலத்தான் மும்தாஜும். இரண்டு பேருக்கும் இந்த ஒரு படத்தை விட்டால் வேறு எந்த சான்சும் கையில் இல்லை.

அப்ப என்ன, 30 வருஷம் கூட நிக்கலாம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil