»   »  மேக்னாவுக்கு கிடைத்த டோஸ்!

மேக்னாவுக்கு கிடைத்த டோஸ்!

Subscribe to Oneindia Tamil

விஜய டி.ராஜேந்தரின் அதிரடி அட்டகாச தயாரிப்பான வீராசாமியின் நாயகி மேக்னா நாயுடு, விரக்தியாக உள்ளார். டி.ஆர்.தன்னைத் திட்டி விட்டாரே என்ற சோகம்தான், இந்த விரக்திக்கு காரணம்.

டி.ராஜேந்தர், வழக்கம் போல கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அஷ்டாவதானம் எடுத்து நடித்தும் வரும்படம் தான் வீராசாமி. மும்பையைச் சேர்ந்த சின்னப் பசங்களைப் போட்டு படத்தை உருவாக்கி வருகிறார் டி.ஆர்.

மோனிஷா என் மோனலிஸா படத்தில் மும்தாஜை மும்பையிலிருந்து இறக்கமதி செய்தது போலவே இந்தப் படத்தில் நாயகியாகமேக்னா நாயுடு என்ற கவர்ச்சி மேக்னட்டை மும்பையிலிருந்து களத்தில் இறக்கியுள்ளார் டி.ஆர்.

கோலிவுட்டின் லேட்டஸ்ட் டேஸ்ட்டைப் புரிந்து கொண்டு, படம் முழுக்க கவர்ச்சி மழையை பொழிந்து வருகிறாராம் மேக்னாவும்.இதில் மேக்னாவுக்கு ஜோடியாக வழக்கம் போல அட்ரஸ் இல்லாத அஜீஸ் என்பவர் நடித்து வருகிறார்.

அரசியல் பாதி, சினிமா பாதி என படத்தை ஆமை வேகத்தில் எடுத்து வந்தார் டி.ஆர். எவ்வளவு நாளைக்குத் தான் ஒரே படத்தில்நடிப்பது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் மேக்னா.

படப்பிடிப்பின் இடையே ஒரு நாள் திடீரென இவர் எஸ்கேப் ஆகிவிட்டார். இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என்றுடி.ஆரும் ஏமாந்தது தான் மிச்சம். போனவர் போனவர் தான். எட்டிப் பார்க்கவே இல்லை.

படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் வேறு என்ன செய்ய முடியும். படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மேக்னாவை தேடிக்கண்டுபிடித்து விட்டு மீண்டும் படத்தை ஆரம்பித்துள்ளாராம் டி.ஆர்.

மீண்டும் வந்துள்ள மேக்னாவுக்கு கவர்ச்சி விஷயத்தில் எதையும் சொல்லித் தரத் தேவையில்லையாம். பாடல் காட்சிகளில்இளமைத் தீ பற்றி எரிகிறதாம், அணைப்பதற்கு ஹீரோ தான் ரொம்ப சிரமப்படுகிறாராம்

கவர்ச்சியில் சொல்லாமலேயே புகுந்து விளையாடும் மேக்னாவுக்கு நடிப்பு தான் சுட்டுப் போட்டாலும் வரவில்லையாம். அதற்காகவெறும் கவர்ச்சியையே காட்டிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது அல்லவா?

இதனால் மேக்னாவுக்கு வசனம் பேசும் சில காட்சிகளை டி.ஆர். வைத்து அதில் நடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் எத்தனைதடவை சொல்லியும், மேக்னாவால், டி.ஆர். எதிர்பார்த்த அளவுக்கு நடிக்க முடியவில்லை.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டி.ஆர். கடைசியில் பொங்கி எழுந்து, சரமாரியாக திட்டி விட்டாராம்.

அப்செட் ஆகிப் போன மேக்னா கண்களில் கண்ணீர் மல்க அப்படியே அமர்ந்து விட்டாராம். பின்னர் கோபம் தணிந்த டி.ஆர்,மேக்னாவை சமாதானப்படுத்தி, லேசு பாசாகவாது நடி. மிச்சத்தை நான் சமாளிச்சுக்கிறேன் என்று தாஜா செய்து அந்தக் காட்சியைஒப்பேற்றினாராம்.

நடிக்க கூட முடியாட்டி எப்படிம்மா கோலிவுட்டில் குப்பையைக் கொட்டுறது?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil