சர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா
துப்பாக்கி முனை தன் சினிமா கேரியரில் முக்கியமான படம் என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மஹா படத்திற்கு இன்னும் நிறைய போஸ்டர்கள் வரவிருக்கின்றது என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடித்துள்ள படம் துப்பாக்கிமுனை. மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
துப்பாக்கி முனை படத்தின் புரோமோஷன் வேலைக்காக சென்னை வந்திருந்த ஹன்சிகா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மஹா படத்தின் போஸ்டர் விவாத பொருளாக மாறியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

முக்கியமான படம்:
பேட்டியில் அவர் கூறியதாவது, "துப்பாக்கி முனை படம் எனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படம். இதில் நான் வித்தியாசமான வேடத்தில், லுக்கில் நடித்துள்ளேன். இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

விக்ரம் பிரபு:
துப்பாக்கி முனை உண்மையிலேயே ஒரு சிறந்த படம். ரசிகர்கள் இதனை நிச்சயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும். விக்ரம் பிரபு இதில் அருமையாக நடித்திருக்கிறார்.

50வது படம்:
மஹா திரைப்பம் என்னுடைய 50வது படம். எனவே அது மிகப்பெரிதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு ஏற்றார் போலவே படத்தின் போஸ்டரே பேசு பொருளாக மாறியிருக்கிறது. இது வெறும் சாம்பிள் தான். இன்னும் நிறைய போஸ்டர்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக வெளியிடப்படும்", என்றார்.

கையில் சுருட்டு:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான மஹா பட போஸ்டரில், சாமியார் கெட்டப்பில் ஹன்சிகா கையில் சுருட்டுடன் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. இந்த சூழ்நிலையில் இன்னும் இதே போல் மேலும் பல போஸ்டர்கள் வெளியாகும் என ஹன்சிகா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











