முதலில் காவி, இப்போ புர்காவா?: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா

By Siva

Recommended Video

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே | ஹன்சிகாவின் அடுத்த சர்ச்சை போஸ்டர்- வீடியோ

சென்னை: ஹன்சிகாவின் மகா படத்தின் புதிய போஸ்டராலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மகா. ஹீரோயினை மையமாக வைத்து எடுத்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து தம்மடித்ததால் சர்ச்சை கிளம்பியது.

முஸ்லீம்

முஸ்லீம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் நீங்கள் ஒரு முஸ்லீம் என்பதால் ஹீரோயினுக்கு காவி கொடுத்து புகைப்பிடிக்க வைத்துள்ளீர்கள். ஏன் அவருக்கு பர்தா போட்டுவிட்டு தம்மடிக்க வைத்திருக்க வேண்டியது தானே என்று இயக்குனர் ஜமீலை சமூக வலைதளங்களில் விளாசினார்கள். படத்திற்கு சாதி, மத சாயம் பூச வேண்டாம் என்று ஜமீல் கேட்டுக் கொண்டது யார் காதிலும் விழவில்லை.

ஹன்சிகா

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட செகண்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா தலையில் முக்காடு போட்டு தொழுதபடி போஸ் கொடுத்துள்ளார். பின்னால் மற்றொரு ஹன்சிகாவின் கையில் துப்பாக்கி உள்ளது. துப்பாக்கியால் இந்த போஸ்டரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இல்லை

இல்லை

சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படி போஸ்டர்களை வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் சர்ச்சையை கிளப்ப இவ்வாறு செய்யவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார். ஹன்சிகா ஏன் அப்படி வருகிறார் என்பது படத்தை பார்த்தால் புரியும் என்கிறார் மதியழகன்.

நக்கல்

நக்கல்

அது என்ன ஹன்சிகாவுக்கு காவி உடை கொடுத்திருக்கிறீர்கள், ஏன் முஸ்லீம் பெண்ணாக காட்ட வேண்டியது தானே என்று நெட்டிசன்கள் ஜமீலிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ஹன்சிகா முஸ்லீம் பெண் போன்று போஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ஹன்சிகா இந்துவா, முஸ்லீமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X