Tamannaah: ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. புது காதலியுடன் விஜய் வர்மா!
சென்னை: நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்விதான் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
'கேடி' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா. அந்த படத்தை தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடியதைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக படிக்காதவன் படத்தில் நடித்தார். அதன் பின் அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களில் நடித்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் படு கவர்ச்சியாக படுக்கை அறை காட்சியில் வரம்பு மீறி நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் 'காவாலா' பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணி கொம்பில் ஏற்றுவிட்டது. அதன்பின் Odela 2, Raid 2, Ranger ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

காதல் முறிவு: நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்த போது, காதல் வயப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எத்தனையோ படத்தில் நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அவருடன் நடித்த போது தான் இவர் எனக்கானவர் என்பதை நான் உணர்ந்தேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தமன்னா, விஜய் வர்மா இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

விஜய் வர்மாவின் புது காதலி: இதன்பின், பிரபல நடிகை பாத்திமா சனா சாய்க் என்பவரை விஜய் வர்மா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார் விஜய் வர்மா. தன் புது காதலி கையை பிடித்து இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும் ஒரு இன்ஸ்டா கணக்கின் லிங்க்கை அதில் அவர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். விஜய் வர்மா இப்படி ஒரு பக்கம் சேட்டை செய்து கொண்டு இருக்க, நடிகை தமன்னாக, மகா சிவராத்திரியை ஈஷா யோகா மையத்தில் கடவுளே கதி என மனமுருகி சிவனை வழிபாட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











