அட கிரணா இது?.. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆளே மாறிட்டாரே.. வீட்டில் கலசம் வைத்து வழிபாடு!
சென்னை: மற்ற நாட்களில் எல்லாம் ராத்திரி நேரத்து பூஜையில் பாடலில் வருபவர் போல படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே சுற்ற வைத்து வரும் நடிகை கிரண் சிவராத்திரியை முன்னிட்டு ஒடேலா 2 படத்தில் வரும் தமன்னா போல ஆளே அடையாளம் தெரியாமல் அகோரி போல மாறிய புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பீக்கில் இருந்தவர் தான் நடிகை கிரண். விஜய்யுடன் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட இவர், சினிமாவில் மார்க்கெட் இழந்த நிலையில், விஷாலின் ஆம்பள படத்தில் ஆன்ட்டி ரோலில் எல்லாம் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சியை காட்ட ஆரம்பித்த இவருக்கு 3.5 மில்லியன் பேர் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
மகா சிவராத்திரி: சினிமாவில் நடிகைகள் ரசிகர்களை என்டர்டெயின் செய்வதற்காக படு கவர்ச்சியாக நடனம் ஆடினாலும் பக்தி மோடுக்கு வந்து விட்டால் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று இரவு முழுக்க கண் விழித்து கடவுளை வழிபடுவதை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் நடிகைகள் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பல டாப் ஹீரோயின்கள் இதுவரை பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவில் யார் யார் பங்கேற்கப் போகின்றனர் என்பதை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கிரண் வீட்டில் சிவ வழிபாடு: நடிகை கிரண் கவர்ச்சி கன்னியாக மாறி சோஷியல் மீடியாவையே திணறடித்து வரும் நிலையில், தனியாக ஆப் எல்லாம் வைத்து ரசிகர்களுடன் கலந்துரையாடி சம்பாதித்து வருகிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது வீட்டில் கும்பம், கலசம் எல்லாம் வைத்து அவர் நடத்திய சிவ வழிபாடு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

36 கூறுகளாக சிவன் இருக்கிறார்: பொதுவாக நீர், நிலம், வாயு, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களின் வடிவாக சிவன் இருக்கிறார் என பலரும் வழிபடுவதை பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் கடந்து ஒட்டுமொத்தமாக 36 கூறுகளாக சிவன் இந்த பிரபஞ்சத்தையே ஆட்சி செய்து வருவதாகவும் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











