அந்த காமக்கொடூரன் படத்திலா நடிக்கப்போற.. ஷூட்டிங்கை ஆரம்பித்த மோனாலிசா.. எச்சரிக்கும் நெட்டிசன்கள்!

மும்பை: இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் கும்பமேளா மோனாலிசா படம் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கைக்கு பிறகு மோனாலிசா மீண்டும் பழையபடி ருத்ராட்ச மாலைகளை விற்கப் போய்விடுவாரா என்கிற கேள்விகள் கிளம்பின.

ஆனால், அவர் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து அந்த ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியானது. மோனாலிசாவை வைத்து வேறு யாராவது படம் இயக்குவார்களா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த சனோஜ் மிஸ்ரா மீண்டும் மோனாலிசாவை வைத்து படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

Mahakumbh Monalisa started her first movie with Sanoj Mishra
Photo Credit:

சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் மோனாலிசா நடிக்க ஆரம்பித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், பலரும் அந்த காமவெறி பிடித்தவருடன் நடிக்க வேண்டாம் என்றும், மோனாலிசா நிலைமையும் மோசமாகிவிடும் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் குவித்து வருகின்றனர்.

கும்பமேளாவில் டிரெண்டான மோனாலிசா: யாருக்கு எப்படி யோகம் அடிக்கும் என்றும் அது எவ்வளவு நாள் நிலைக்கும் என்றும் யாருக்குமே தெரியாது. கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக்கொண்டிருந்த சாதாரண பெண்ணான மோனாலிசாவின் கண்கள் அழகாகவும் வசீகரிக்கும் விதமாக உள்ளதாக சில யூடியூபர்கள் அவரை பேட்டியெடுத்து வெளியிட அது வைரலானது. உடனடியாக ஏகப்பட்ட யூடியூபர்கள் அவரை படமெடுக்க சூழ்ந்த நிலையில், சில நாட்களில் இந்தியளவில் சோஷியல் மீடியா மூலம் மிகப்பெரிய ஸ்டாராகவே மாறிவிட்டார் மோனாலிசா.

சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் நடிக்கும் மோனாலிசா: கும்பமேளா மோனாலிசா கூடிய சீக்கிரமே பாலிவுட் நடிகையாக போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை நான் ஹீரோயினாக மாற்றுகிறேன் என முன் வந்தார். மேலும், 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' எனும் டைட்டிலில் படம் இயக்கப் போவதாக அறிவித்தார்.

பாலியல் வழக்கில் கைது: இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் சனோஜ் மிஸ்ரா என திடீரென அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனோஜ் மிஸ்ரா கதை அவ்வளவுதான் என்றும் மோனாலிசா ஏமாந்துவிட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், மீண்டும் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மோனாலிசா.

எச்சரிக்கும் ரசிகர்கள்: 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' திரைப்படம் பூஜைப் போட்டு படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கிவிட்டது என்றும் ஒருவழியாக தான் ஹீரோயினாகி விட்டேன் என்றும் தனது ரசிகர்களிடம் போட்டோக்களை பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் மோனாலிசா. அவரது முதல் படத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அதே அளவுக்கு ரசிகர்கள் போயும் போயும் அந்த காமக்கொடுர இயக்குநர் படத்திலா நடிக்கிற பார்த்தும்மா என எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர். அடுத்த கேஸ் அவர் மேல நீ கொடுக்காமல் இருந்தால் சரி என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X