வித் லவ் படத்தில் வீணாக்கப்பட்டாரா மகாராஜா மகள்.. பிக் பாஸ் சாச்சனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற மகாராஜா படத்தில் செம ஸ்ட்ராங்கான ரோலில் நடித்து அசத்தியவர் தான் சாச்சனா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அவர் வந்த போது, "நீ ஏன் இங்க வந்த" என விஜய் சேதுபதியே கடிந்துக் கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாச்சனா இன்னொரு ஜூலி போல ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், பிக் பாஸுக்குப் பிறகாவது சாச்சனா நெகட்டிவிட்டியில் இருந்து தப்பிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று வெளியான 'வித் மை லவ்' திரைப்படம் மீண்டும் ஏழரையை கூட்டியுள்ளது.

அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வித் லவ்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் சாச்சனாவை டார்கெட் செய்து ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மகாராஜா மகள்: "அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன்" என விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் சாச்சனாவை ராணி போல பார்த்துக் கொண்டார். படத்தில் தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதிக்காக பழிவாங்குவதும் கடைசியில், மகளுக்கு அப்படியொரு அநீதி நடக்க உண்மையிலேயே யார் காரணம் என்கிற ரகசியம் வெளியாகும் போது தியேட்டரே ஷாக் ஆகிவிடும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல நெட்பிளிக்ஸில் உலகளவில் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து கொண்டாடினர். சீனாவில் வெளியாகி அங்கே உள்ள மக்களும் கண்ணீர் சிந்தி சாச்சனாவின் படத்தை பார்த்து ரசித்தனர்.

வித் லவ் படத்தில் சாச்சனா: மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள 'வித் லவ்' படத்தில் சாச்சனா பள்ளி மாணவியாக நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மோனிஷாவாக நடித்துள்ள அனஸ்வரா ராஜனின் பள்ளி தோழியாக வருகிறார். 10வது படிக்கும் போதே காதல், காதலனுக்கு கண்ட போட்டோஸ் அனுப்புவது, பாத்ரூமில் அழுவது என அவருக்கு இந்த படத்திலும் ஒருமாதிரியான கதாபாத்திரத்தையே கொடுத்துள்ளனர். இந்நிலையில், அதை பார்த்த நெட்டிசன்கள் சாச்சனாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்: வித் லவ் படத்தில் பிக் பாஸ் சாச்சனாவுக்கு சொதப்பலான ரோல் கொடுத்துள்ளனர். ஆனால், சாச்சனா அதை எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்தளவுக்கு சொதப்பி நடித்துள்ளார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சாச்சனாவின் ரசிகர்கள் தொடர்ந்து இதற்கு மேலும், டைப் காஸ்டிங் கதாபாத்திரங்களில் சாச்சனா நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே சிரமம் என்பதால், ட்ரோல்களை கடந்து அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சாச்சனா கவனம் செலுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications