மினி ஸ்கர்ட்.. மினி ஷர்ட்.. விஜய்சேதுபதி ரீல் மகள் தாய்லாந்தில் அடித்த லூட்டிய பாருங்க!

சென்னை: 'மகாராஜா' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துப் பிரபலமான நடிகை சச்சனா நமிதாஸ், சென்னையின் கடும் வெயிலில் இருந்து தப்பிக்க தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் மினி ஸ்கர்ட், ஷர்ட்டில் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சச்சனா நமிதாஸ்: சென்னையில் பிறந்த சச்சனா, பொன்குமார் இயக்கிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, 'மகாராஜா' படத்தில் பள்ளி மாணவியாகவும், விஜய் சேதுபதியின் மகளாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Maharaja vijay sethupathi Sachana
Photo Credit:

நான் சிறுமி இல்லை: விஜய்சேதுபதியின் ரீல் மகள்: 'மகாராஜா' படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததால், பலரும் சச்சனாவை சிறுமி என்று நினைத்திருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனக்கு 21 வயது என்று தெரிவித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார். மேலும், தனது தாயின் ஆசைக்காகவே போராடி வருவதாகவும், அதற்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறினார். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே வெளியேறிய சச்சனா, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 60 நாட்கள் இருந்தார். ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வீதம், 60 நாட்களுக்கு சுமார் ரூ.12 லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் ஜாலி ட்ரிப்: அண்மையில் கென் கருணாஸ் இயக்கிய 'யூத்' திரைப்படத்திலும் பள்ளி மாணவியாக நடித்திருந்த சச்சனா, அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தாய்லாந்தில் ஜாலியாக விடுமுறையை கழித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், கடற்கரையில் மினி ஸ்கர்ட்.. மினி ஷர்ட்.. அணிந்து கடற்கரையில் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X