தாலி கட்டிய தருணம்.. 'மகாராஜா' தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் - ஷர்மிளா மாண்ட்ரே திருமணப் புகைப்படங்கள்
சென்னை: கன்னட சினிமாவின் டாப் நடிகை ஷர்மிளா மாண்ட்ரே மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அரச குடும்பத்து திருமணம் போல இவர்களின் திருமணம் வியக்கவைக்கும் வகையில் நடந்துள்ளது. தற்போது அவர்களின் திருமண போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தயாரிப்பாளரான சுதன் சுந்தரம் தமிழில் கப்பல், நிபுணன், இறைவன், சீதகாதி, பார்க்கிங், மகாராஜா போன்ற படங்களை தயாரித்துள்ளார். நடிகை ஷர்மிளா மாண்ட்ரேவிற்கும், தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்திற்கும் கடந்த மாதம் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் நிச்சயதார்த்தப் புகைப் படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின.

கோலாகல திருமணம்: டாப் நடிகையான ஷர்மிளா மாண்ட்ரே, இந்த ஆண்டு மார்ச் மாதம் சுதன் சுந்தரம் தன்னிடம் காதலைச் சொன்னார் என்றும், அவரின் பணிவும், அனைவரையும் சமமாக நடத்தும் அவரது எளிமையான குணம் எனக்கு பிடித்து இருந்ததால் நானும் ஒகே சொல்லிவிட்டேன். இதைத்தொடர்ந்து தான் இருவீட்டாரிடம் பேசி எங்களின் திருமண ஏற்பாடுகளை செய்தோம். எங்கள் இருவருக்குள் இருக்கும் ஆழமான நட்பு தான், எங்கள் காதலுக்கும் இந்த திருமண பந்தத்திற்கும் மிக வலுவான அடித்தளத்தளமாக அமைந்தது என்றார்.
திருமண போட்டோ: இதையடுத்து இந்த மாதம் ஜூலை 12ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரிய ராயல் அரண்மனையில், வேத கால சடங்குகள் முழங்க இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்தியாவின் டாப் சினிமா பிரபலங்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது இவர்களின் திருமண போட்டோவை நடிகை ஷர்மிளா மாண்ட்ரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு நடிகை ரம்யா, ஸ்ருதி ஹரிஹரன், ராதிகா நாராயண், சோனு கௌடா நடிகை அமலா பால் ஆகியோர் இணையத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த மிக பிரம்மாண்டமான மற்றும் கிளாபரான நட்சத்திரத் திருமணமாக இது மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications