நடிகர் சுஷாந்த் சிங் காதலிக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதா..? பெண் அமைச்சர் அதிரடி!

By

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் கேர்ள் பிரண்டை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் என்று மகாராஷ்ட்ர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து ஒரு மாதம் கடந்துவிட்டது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா வாரிசு

சினிமா வாரிசு

சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில், நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்து ஒரு மாதம் ஆனதை அடுத்து, தனது வாட்ஸ் அப் டிஸ்பிளேவை மாற்றினார், அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

சுஷாந்த் சிங்குடன் தான் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை வைத்தார். பின்னர் தனது இன்ஸ்டாவில் சுஷாந்த் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பானது. வாழ்நாள் முழுவதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று அதில் கூறியிருந்தார் ரியா. இதையடுத்து தனக்கு வந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்

சைபர் கிரைம் போலீசார்

சைபர் கிரைம் போலீசார்

அதில், நான் தற்கொலை செய்துகொள்ளாவிட்டால், என்னை பாலியல் வன்கொடுமை செய்வோம் என்றும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டும் உரிமையை என் மவுனம் உங்களுக்கு எப்படி தருகிறது?' என்று கேட்டிருந்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு கோரிக்கையும் வைத்திருந்தார். அதோடு தனக்கு வந்த கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை மெசேஜின் ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவு செய்திருந்தார்.

அமைச்சர் யசோமதி தாகூர்

அமைச்சர் யசோமதி தாகூர்

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யசோமதி தாகூர், இப்படி மிரட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தை மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X