Mahashivratri : மகா சிவராத்திரி.. ஈஷா யோகா மையத்தில் தமன்னாவுடன் ஆட்டம் போட்ட துரந்தர் ஹீரோயின்!

கோவை: இந்திய திரையுலகில் பலரும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். ஒரு படம் தொடங்கும் போது பூஜை நடத்தி படத்தை தொடங்குகிறார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் சிலர் இருந்தாலும் வழிபடுபவர்களை தடுப்பதில்லை. பிரபலங்கள் இது மட்டும் இல்லாமல் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம், அல்லது படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு அருகில் ஏதாவது பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும் சென்று வழிபட்டு வருவதை பார்த்து வருகிறோம். பிரபலங்கள் அடிக்கடி திருப்பதிக்குச் செல்லும் செய்திகள் இதற்கு எடுத்துக்காட்டு.

இப்படி இருக்கையில் மஹா சிவராத்திரி போன்ற நன்னாளில் பிரபலங்கள் சிவனை வழிபாடாமல் இருப்பார்களா? பலரும் தங்களது வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களிலோ வழிபாடு நடத்துகிறார்கள். விரதம் இருக்கிறார்கள், இரவு முழுவதும் கண்விழித்து சிவனை பாடுகிறார்கள். இந்த வழிபாட்டு முறை ஆண்டு தோறும் நடைபெற்று வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

இப்படி இருக்கையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், இந்த மையம் நிறுவப்பட்ட கால கட்டத்தில் இருந்து சிவராத்திரி வழிபாடு என்பது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், இந்த ஆண்டும் அதாவது 2026 ஆம் ஆண்டு மகா சிவராத்திரியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர். இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Mahashivratri 2026 Celebrations Actress Tamannah Sara Arjun amp amp Srinidhi Shetty Dance at Isha Foundation

கதாநாயகிகள்: நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் துரந்தர் படத்தின் கதாநாயகி சாரா அர்ஜுன் கலந்து கொண்டு உற்சாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது மூவரும் இணைந்து கொண்டு பார்வையாளர்கள் வரிசைக்கு அருகே அங்கே இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமன்னா: நடிகை தமன்னா, தான் எல்லா ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தில் இங்கு வந்து வழிபாடு செய்வதன் மூலம் தனக்கு மன நிம்மதி கிடைப்பதாகவும், புத்துணர்வு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இங்கு பரிமாறப்பட்ட அன்னதானம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசி உள்ளார். தமன்னா தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஈஷா யோகா மையத்திற்கு சென்று சிவனை வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளவர். அதேப்போல் நடிகை சமந்தாவும் தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் இது போல ஈஷா யோகா மையத்திற்கு வந்து வழிபாடு நடத்திச் செல்வார். சமந்தாவின் திருமணம் கூட இங்குதான் நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X