பிகினி சமந்தா... போட்டு தாக்கும் மகேஷ்பாபு ரசிகர்கள்
அஞ்சானில் பிகினி உடையில் அஞ்சாமல் நடித்த சமந்தாவை பிடித்து சமூக வலைத்தளங்களில் காட்டு காட்டென்று காட்டுகின்றனர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள்.
ஏன் இப்படி, சமீபத்தில் பிலிம்பேர் விருது விழாவில் கூட சமந்தாவும், மகேஷ்பாபுவும் அருகருகே அமர்ந்து நட்போடு சிரித்துப் பேசிக்கொண்டுதானே இருந்தனர். அதற்குள் என்னவாகிவிட்டது என்று நினைக்கவேண்டாம். சில மாதங்களுக்கு முன்னர் மகேஷ்பாபுவின் படத்தைப் பற்றி சமந்தா அடித்த கமெண்ட்தான் இப்போது அவருக்கே ரிவீட் அடிக்கிறது.

பிகினி நாயகி
அஞ்சான்' படத்தில் ஒரு சில நொடிகள் வரும் நீச்சல் உடைக் காட்சியில் சமந்தா நடித்தாலும் நடித்தார், விலைவாசி உயர்வை கூட மறந்துவிட்டு அதைப் பற்றிய பேச்சுதான் ஊடகங்களில் இப்போது அதிகமாக உலவிக் கொண்டிருக்கிறது.

சமந்தாவா இப்படி?
படம் சரியாக ஓடாவிட்டாலும் சமந்தாவின் கவர்ச்சியான பிகினி காட்சி பற்றி அதிகப்படியான கமெண்ட்டுகள் எழுந்து வருகின்றன. இதுவரை தெலுங்கில் கூட எந்தப் படத்திலும் பிகினியில் நடிக்காதவர் தமிழில் திடீரென இப்படி நடிக்க என்ன காரணம் என யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

மகேஷ்பாபு ரசிகர்கள்
இழுத்துப் போர்த்தி நடித்த சமந்தாவை பிகினியில் பார்த்த தமிழ் ரசிகர்கள் அந்த காட்சியைப் பற்றி புல்லரித்து எழுதினாலும் தெலுங்கு ரசிகர்கள் சீற்றத்துடன்தான் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
குறிப்பாக மகேஷ் பாபுவின் ரசிகர்கள்தான் சமந்தாவை போட்டுத் தாக்கிவிருகின்றனர்.

நடிகரின் காலடியில்
அதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு மகேஷ் பாபு, கீர்த்தி சனோன் நடித்த '1 நேநொக்கடைன்' என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்திற்காக இடம் பெற்ற விளம்பரங்களில், கடற்கரையில் மகேஷ் பாபுவின் காலடியில் அமர்ந்தவாறு கீர்த்தி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

கமெண்ட் அடித்த சமந்தா
அதைப் பற்றி சமந்தா, "மிகவும் பிற்போக்குத்தனமான காட்சி" என கமெண்ட் அடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகேஷ் பாபு ரசிகர்கள் பதிலுக்கு சமந்தாவைப் பற்றி பல்வேறு விதமான கமெண்ட்கள் அடிக்க அப்போது அது ஒரு பெரும் பிரச்சனையானது.

விருது விழாவில்
சமீபத்தில்தான் மகேஷ் பாபுவும், சமந்தாவும் ஒரு விருது நிகழ்ச்சியில் அவர்கள் நட்பை மீண்டும் புதுப்பித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அனல் பறக்கும் கமெண்ட்டுகள்
ஆனாலும் 'அஞ்சான்' படத்தில் சமந்தா நீச்சல் உடையில் நடித்ததைப் பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்து விட்டனர். சமந்தாவைப் பற்றி மீண்டும் கமெண்ட்களை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.

கட் அவுட் சண்டை
இதே ரசிகர்கள்தான் கட் அவுட் வைப்பதில் சமந்தா ரசிகர்களுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











